கங்குலி, கம்பீர் வரிசையில் சூப்பர் பிளேயரா இருந்தும் யாருமே பாராட்டுவதில்லை – இந்திய வீரர் பற்றி சஞ்சய் பாங்கர் ஆதங்கம்

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. அதனால் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட ஷிகர் தவான் தலைமையில் இளம் இந்திய அணி இத்தொடரில் விளையாடி வருகிறது.

INDvsRSA

- Advertisement -

ஒரு காலத்தில் மிடில் ஆர்டரில் தடுமாறிய ரோகித் சர்மாவை 2013இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இதே ஷிகர் தவானை இணைத்து அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி புதிய ஓப்பனிங் ஜோடியை உருவாக்கினார். அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டைச் சதங்கள், ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் உட்பட ஏராளமான சாதனைகளை வெற்றிகளை குவித்து ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். மறுபுறம் தோனியின் முடிவை பொய்யாகாத வகையில் ஷிகர் தவானும் தனக்கென ஒரு முத்திரையை உருவாக்கி நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பங்கர் ஆதங்கம்:
குறிப்பாக இந்தியா வென்ற 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக தங்க பேட் விருதை வென்ற அவர் 2017 சாம்பியன்ஸ் ட்ராபியிலும் அதிக ரன்கள் குவித்து இந்தியா பைனல் வரை செல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்து மீண்டும் தங்க பேட் விருதை வென்றார். அத்துடன் 2018இல் இலங்கையில் நடைபெற்ற நிதஹாஸ் முத்தரப்பு தொடர், 2018 ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தொடர் நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவரை ரசிகர்களும் வல்லுனர்களும் மிஸ்டர் ஐசிசி என்றழைக்கிறார்கள்.

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் – கங்குலி ஆகியோருக்குப் பின் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த இந்திய ஜோடியாக ரோகித் சர்மாவுடன் சாதனை படைத்துள்ள அவர் 6000+ ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். அந்த வகையில் வரலாற்றில் சவுரவ் கங்குலி, கௌதம் கம்பீர் ஆகியோருக்குப் பின் மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தும் ஷிகர் தவானையும் அவரது பங்களிப்பையும் யாரும் பாராட்டுவதில்லை என்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருசில விஷயங்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தகுதியுடைய தவான் அதற்கான பாராட்டுக்களை பெறவில்லை. இந்தியாவுக்காக விளையாடிய சிறந்த இடதுகை பேட்ஸ்மென்கள் என்று நினைத்தால் முதலிடத்தில் சவுரவ் கங்குலியும் அதன்பின் கௌதம் கம்பீரும் இருப்பார்கள். ஆனால் அதன்பின் யார்? ஒருநாள் கிரிக்கெட்டில் தவான் கொண்டிருக்கும் நிலைத்தன்மை முற்றிலும் தனித்துவமானது”

Bangar

“அவர் எப்போதுமே மகிழ்ச்சி, போனால் போகட்டும், அதிர்ஷ்டம் ஆகியவற்றை பின்பற்றும் நபர். கடந்த காலங்களில் நடந்த பல விஷயங்களுக்காக அவர் உண்மையில் வருத்தப்படவில்லை. அதுவே அவரது மனநிலை, அதுவே அவருடைய வாழ்க்கைப் பார்வை. அவர் கையில் இருப்பதை மட்டும் மதிக்கிறார். தற்சமயம் அவரது கையில் ஒருநாள் கிரிக்கெட் மட்டும் உள்ளது. இந்த அனைத்து குணங்களும் அவரை மிகச் சிறந்த மனிதராக காட்சிப் படுத்துகிறது” என்று பாராட்டினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறிய ஷிகர் தவானை அதிலிருந்து குணமடைந்து வந்ததும் இந்திய அணி நிர்வாகம் ஒரு குப்பையாகவே நடத்துகிறது. ஏனெனில் அவர் காயமடைந்த தருணங்களில் கேஎல் ராகுல் இளம் வீரராகவும் அவரை விட சற்று சிறப்பாக செயல்பட்டதால் இவரை மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

இதையும் படிங்க : தற்போதைய இந்திய அணியில் அவருக்கு தான் யுவராஜ் மாதிரி சிக்ஸர் அடிக்கும் திறமை இருக்கு – டேல் ஸ்டைன் பாராட்டு

மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கிற்காக போனால் போகட்டும் என்பது போல் இதுபோன்ற 2வது தர தொடர்களில் அவரை கேப்டனாக்கும் பிசிசிஐ அடுத்த தொடரில் கழற்றி விடுகிறது. அதிலும் சமீபத்தில் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அறிவித்தும் கடைசி நேரத்தில் ராகுல் வந்தார் என்பதற்காக அவரை துணை கேப்டனாக பிசிசிஐ அறிவித்தது அவமானப்படுத்தியதில் உச்சக்கட்டமாகும்.

Advertisement