- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்த 2 விஷயம் மிஸ்ஸிங்.. இந்தியாவிடம் ஸ்கூல் பசங்க மாதிரி விளையாடி இலங்கை தோத்துட்டாங்க.. கம்ரான் அக்மல்

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் இந்தியா வெற்றி நடை போட துவங்கியுள்ளது.

மறுபுறம் புதிய கேப்டன் அசலங்கா மற்றும் பயிற்சியாளர் ஜெயசூர்யா தலைமையில் இலங்கை எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய அந்த அணி சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறது. அந்த வரிசையில் இந்தத் தொடரில் முதல் போட்டியில் 214 ரன்களை துரத்திய இலங்கை 140/1 என்ற வலுவான துவக்கத்தைப் பெற்றது.

- Advertisement -

ஸ்கூல் குழந்தைகள்:
அதனால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியை அடுத்த 5.2 ஓவரில் 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை எடுத்து சுருட்டிய இந்தியா அபார வெற்றி பெற்றது. அதேபோல 2வது போட்டியிலும் ஓரளவு நல்ல துவக்கத்தை பெற்ற இலங்கை கடைசி 5 ஓவரில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு காரணமானது. அதனால் சொந்த மண்ணில் மீண்டும் இந்தியாவிடம் தோற்றுள்ளது இலங்கை ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உலகச் சாம்பியன் இந்தியாவுக்கு எதிராக இத்தொடரில் வெற்றிக்கான விழிப்புணர்வு மற்றும் பொறுப்பு இல்லாமல் விளையாடி இலங்கை தோற்றுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இரண்டாவது போட்டியில் இலங்கை கடைசி 5 ஓவரில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது”

- Advertisement -

“அதனால் 190 ரன்கள் எடுப்பதற்கு தயாராக இருந்த அவர்கள் கடைசியில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த தோல்விக்காக அவர்கள் தங்களை தாங்களே குறை சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் பொறுப்பை எடுத்து விளையாடவில்லை. குறிப்பாக ஹஸரங்கா மற்றும் சனாக்கா அவுட்டான விதம் பள்ளிக் குழந்தைகள் விளையாடுவது போல தெரிந்தது”

இதையும் படிங்க: 11 ஓவரில் 16 விக்கெட்ஸ்.. நீங்க அதுக்கு தகுதியானவங்க இல்லன்னு 2 நாளில் தெரிஞ்சுடுச்சு.. இலங்கையை விளாசிய மஹ்ரூப்

“இலங்கை அணியில் போட்டி விழிப்புணர்வு மற்றும் பொறுப்பு ஆகியவை காணவில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி ஜூலை 30ஆம் தேதி பல்லக்கேல் நகரில் நடைபெறுகிறது. அப்போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் இலங்கை களமிறங்குகிறது. மறுபுறம் கடைசி போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் வெற்றியை பெற இந்தியா தயாராகியுள்ளது.

- Advertisement -