சி.எஸ்.கே அணிக்காக விளையாடணும்னு ஆசைப்பட்டு காத்திருந்தேன்.. அதுக்கு காரணம் இவர்தான் – கமலேஷ் நாகர்கோட்டி

Nagarkoti
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கியிருந்தனர்.

சி.எஸ்.கே அணிக்காக விளையாட வேண்டும் என்பது என் கனவு :

அந்த வகையில் இதுவரை ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களை இந்த ஏலத்தில் குறிவைத்து வாங்கி இருந்தது. அந்த வகையில் குறிப்பிட்ட சில வீரர்களை சென்னை அணி அதிக தொகை கொடுத்து வாங்கி இருந்தாலும் அடிப்படை தொகைக்கு இளம் வீரர்கள் பலரை வாங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமாக பந்துவீசி அசத்தியிருந்த கமலேஷ் நாகர்கோட்டி காயம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக எவ்வித போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த வேளையில் தற்போது முழு உடற்தகுதி பெற்ற அவரை சிஎஸ்கே அணி 30 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக தான் கம்பேக் கொடுக்க இருப்பது குறித்து பேசியுள்ள கமலேஷ் நாகர்கோட்டி கூறுகையில் : இந்த ஒரு வாய்ப்புக்காக நான் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகவும் நன்றியுடன் கருதுகிறேன். ஏனெனில் நான் காயம் குணமடைந்து எந்த அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அந்த அணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சி.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணம் நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் விளையாட ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்தது கிடையாது. ஆனாலும் தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. கடந்த பல ஆண்டுகளாகவே காயம் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டேன்.

இதையும் படிங்க : 5 வருஷமா தடுமாறும்.. விராட் கோலி இதை செய்யும் வரை ரன்ஸ் அடிக்க முடியாது.. ஆண்டி ராபர்ட்ஸ் அதிருப்தி

ஆனால் தற்போது முழு உடற்தகுதி பெற்று போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு தயாராக உள்ளேன். நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த காத்திருப்பதாக கமலேஷ் நாகர்கோட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement