5 வருஷமா தடுமாறும்.. விராட் கோலி இதை செய்யும் வரை ரன்ஸ் அடிக்க முடியாது.. ஆண்டி ராபர்ட்ஸ் அதிருப்தி

Andy Roberts 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களாகவே டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். கடந்த 5 வருடங்களில் 3 சதங்கள் மட்டுமே அடித்த அவர் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

ஆனால் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் மீண்டும் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். இந்நிலையில் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் முன்னாள் வீரர் ஆண்ட்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த 5 வருடங்களாக அவரால் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் குவிக்க முடியவில்லை என்றும் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

5 வருடமாக தடுமாற்றம்:

அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி முழுமையான கவனத்தை செலுத்தி விளையாடாததே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒருநாள், டி20 அளவுக்கு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதில்லை என்று ராபர்ட்ஸ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதை செய்யாத வரை எஞ்சிய ஆஸ்திரேலிய போட்டிகளில் விராட் கோலி அசத்துவார் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி மிட்-டே இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அடிலெய்ட் தோல்விக்குப் பின் மறுமலர்ச்சி ஏற்படுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவரது பேட்டிங்கை சரியாக பாருங்கள். உங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் கடந்த 5 வருடங்களாக போராடி வருகிறார். உண்மையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் கவனத்துடன் விளையாடுவது அவசியம்”

- Advertisement -

கவனம் செலுத்துங்க:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் முழுமையான கவனத்தை செலுத்தினால் மட்டுமே உங்களால் அதிகப்படியான ரன்கள் குவிக்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் முன்பு போல் இப்போதும் இல்லை. அப்படி இருந்தும் உங்களுடைய பேட்ஸ்மேன் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை பாருங்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 5 மேட்ச்ல 8 சொதப்பல்.. அடி வாங்கியும் எப்போ தான் திருந்துவீங்க.. இந்திய அணியை விளாசிய ஆகாஷ் சோப்ரா

இந்த நிலையில் முதல் போட்டியில் சென்ற இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. இதை அடுத்து மூன்றாவது போட்டி பிரிஸ்பேன் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டியில் மீண்டும் வெற்றி பெறும் முனைப்புடன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement