5 மேட்ச்ல 8 சொதப்பல்.. அடி வாங்கியும் எப்போ தான் திருந்துவீங்க.. இந்திய அணியை விளாசிய ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 195 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த தொடர்ச்சியான தடுமாற்றத்திற்கு பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடுவது காரணம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சில் மிகவும் அஜாக்ரதையுடன் விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

முதல் இன்னிங்ஸ்:

அப்படி முதல் இன்னிங்ஸில் அடிவாங்கிய பின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அது பெரும்பாலும் தோல்வியையே கொடுப்பதாக அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது நியூசிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது.

பின்னர் 2வது இன்னிங்சில் 463 ரன்கள் குவித்து இந்தியா போராடி தோற்றது. அதே போல பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 150க்கு ஆல் அவுட்டான இந்தியா பின்னர் 487-6 ரன்கள் அடித்து வென்றது. அந்த 2 இன்னிங்ஸ் தவிர்த்து கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 8 இன்னிங்சில் மோசமாக பேட்டிங் செய்தது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

பேட்டிங் சொதப்பல்கள்:

இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “கடந்த சில போட்டிகளாக இந்திய பேட்ஸ்மேன்கள் 2 முறை மட்டுமே அதுவும் 2வது இன்னிங்சில் மட்டுமே நன்றாக செயல்பட்டுள்ளார்கள். நம்மால் முதல் இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்ய முடியவில்லை. சவாலான சூழ்நிலைகளில் மீண்டும் மீண்டும் நாம் சரிவை சந்திக்கிறோம். கடந்த 5 போட்டிகளில் நாம் 2 முறை மட்டுமே அசத்தியுள்ளோம்”

இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்த 3 முக்கிய முடிவுகளை இந்திய அணி எடுக்க வேண்டும் – ஹர்பஜன் சிங் கருத்து

“8 முறை பேட்டிங்கில் சொதப்பியுள்ளோம். அந்த 8இல் 5 முதல் இன்னிங்ஸில் சொதப்பியது. அப்படி நம்முடைய பேட்டிங் முதல் இன்னிங்ஸில் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே போட்டியின் நடுவே நீங்கள் முன்னேறத் துவங்குகிறீர்கள். அந்த பிரச்சனை இருக்கிறது என்று எப்போது தான் உணர்ந்து முன்னேறுவீர்கள்? அந்த வகையில் நம்முடைய பேட்டிங்கில் பிரச்சனை கண்டிப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement