மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமானார். அப்போது அவர் மிகவும் ஒரு இளம் வயது வீரர். அந்த நேரத்தில் யுவராஜ் சிங் ,விரேந்தர் சேவாக், முகமது கைஃப் சௌரவ் கங்குலி ,போன்ற ஒரு சீனியர் வீரர்களாக இருந்தனர். ஒரு கிரிக்கெட் தொடர் நடக்கும்போது சீனியர் வீரராக இருந்த முகமது கைது தனது அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரையும் அழைத்து நொய்டாவில் உள்ள தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.
அந்த விருந்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பற்றி பேசி தற்போது நெகிழ்ந்துள்ளார் முகமது கைஃப் .இதுகுறித்து அவர் கூறுகையில்… 2006 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது அப்போது இந்திய அணியின் வீரர்களை எனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தேன். சச்சின், கங்குலி , பயிற்சியாளர் கிரேக் சாப்பல் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்திருந்தனர். இதன் காரணமாக நான் பதட்டமாக இருந்தேன் .
அவர்களை சரியாக கவனிக்க வேண்டும் என்று பதறிக் கொண்டே இருந்தேன். சீனியர் வீரர்கள் எல்லாம் தனி அறையில் இருந்தனர். அதேவேளையில் தோனி, ரெய்னா போன்ற ஜூனியர் வீரர்கள் தனியறையில் இருந்தார்கள். நான் சீனியர் வீரர்களை கவனிப்பதில் அதிக நோக்கம் கொண்டிருந்தேன். இதன்காரணமாக ஜூனியர் வீரர்களை சரிவர கவனிக்க முடியவில்லை.
மேலும் தோனிக்கு பிரியாணி பரிமாறிய போது அவருக்கு சரியாக கவனிக்கவில்லை. இதனால்தான் தோனி அவர் தனது முதல் என்னை அணியில் எடுக்கவே இல்லை என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார் கைப். தற்போது வரை இந்த விருந்தை பற்றி தோனி முகமது கைஃப்-இடம் அவ்வப்போது பேசி சிரிப்பாராம். மேலும் , நான் உங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது என்னை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்றும் விளையாட்டாக முகமது கைப்-இடம் தோனி கூறுவாராம்.
இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டர் ஆன கைப் இந்திய அணிக்காக கடந்த 2002ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதன்பிறகு அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பே வழங்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.
இந்திய அணிக்காக 2000மாவது ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர் பதிமூன்று டெஸ்ட் போட்டிகளிலும், 125 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். என்னதான் மிகச்சிறந்த ஃபீல்டராக இந்திய அணியில் இருந்தாலும் அவரது பேட்டிங் சற்றே மெதுவாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அதனால் அவர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். மேலும் அவரது தலைமையிலான அண்டர் 19 இந்திய அணி 2000 ஆவது உலகக் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமை உடையது.
தற்போது கொரோனா வைரஸ் பாதி ஏற்படுத்திய பாதிப்பினால் இந்தியாவில் மார்ச் மாதம் துவங்க இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி தள்ளிவைக்க பட்டுள்ளதால் தற்போது வீரர்கள் அனைவரும் தங்களது கிரிக்கெட் குறித்து அனுபவத்தைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கைப் தோனியுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இணையத்தில் நாள்தோறும் வெளிவரும் செய்திகளில் தோனி குறித்து நிச்சயம் செய்தி ஏதாவது வெளியாகிக் கொண்டேதான் இருக்கிறது.
மேலும் செய்தியை தொகுப்பவர்களும், பேட்டி எடுப்பவர்கள் என அனைவரும் ஒரு கேள்வியாவது தோனியை முன்வைத்து கேட்டு விடுகின்றனர். அதனால் பேட்டி அளிப்பவரும் தோனி குறித்த தங்களது கருத்தை பேசி விடுகின்றனர் இந்நிலையில் தோனி குறித்த கைப்பின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.