இவர் மீது சுமை அதிகரித்தால் அவரோட பேட்டிங்கும் போய்டும். இந்திய அணிக்கு பெரிய பாதிப்பும் ஏற்படும் – கைப் எச்சரிக்கை

- Advertisement -

இந்திய அணியில் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டவர் ரிஷப் பண்ட் .தொடர்ச்சியாக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக களம் இறங்கி வந்த அவர் தொடர்ந்து தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் தற்போது அவருக்கு பதிலாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ராகுலும், டெஸ்ட் போட்டிகளில் சகாவும் விக்கெட் கீப்பராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

Pant

- Advertisement -

தோனிக்கு பிறகு ரிஷப் பண்ட் தோனி போன்று ஒரு பெரிய அளவில் விக்கெட் கீப்பராக மாற்றும் யோசனையில் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பை தொடர்ந்து வழங்கி வந்தது. ஆனால் அவருக்கு கொடுத்த வாய்ப்பை அனாவசியமாக பயன்படுத்தி மெத்தனமாக ஆட்டம் இழந்து வெளியேறும் பண்ட் ரசிகர்களால் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். மேலும் கீப்பிங்கும் சொல்லிக் கொள்ளும் அளவில் அவர் சிறப்பாக செயல்படவில்லை.

இதனால் அவருக்கு பதிலாக வேறு இளம் வீரர்களை கீப்பர்களை அணிக்கு கொண்டு வரலாம் என்று பலரும் யோசித்து வந்த நிலையில் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டு அதற்கு பதிலாக ராகுல் ஆஸ்திரேலிய தொடரில் கீப்பிங் செய்தார். அப்போது அவர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என்று சிறப்பாக அமைய அவர் தொடர்ச்சியாக விக்கெட் கீப்பிங் பக்கமாக திரும்பி வருகிறார். ஆனால் இந் நிலையில் அது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் கூறுகையில் :

Rahul

ராகுல் இந்திய அணியின் முழுநேர விக்கெட் கீப்பர் கிடையாது. அவர் ஒரு பகுதி நேர விக்கெட் கீப்பராக தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் முதன்மை விக்கெட் கீப்பருக்கு காயம் அடையும் காயம் ஏற்படும் பட்சத்தில் அவர் பகுதிநேர விக்கெட் கீப்பராக இருக்கலாம். மற்றபடி ராகுலை முதன்மை விக்கெட் கீப்பராக பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அதனால் அவருக்கு காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரு பேட்ஸ்மேனாக அவருக்கு அதிக வேலைச்சுமை இருப்பதால் தொடர்ச்சியாக அவரை கீப்பராக பயன்படுத்தினால் அவரது ஆட்டம் பாதிக்கும்.

Rahul

எனவே வரும் டி20 உலகக்கோப்பையில் ராகுலை துவக்க வீரராகவே களமிறக்கவேண்டும். மேலும் முதனமை விக்கெட் கீப்பராக தோனி அல்லது பண்ட் ஆகியோரில் ஒருவரை விளையாடவைக்கலாம் என்றும் கைப் யோசனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement