இந்தியாவில் நடைபெற்று நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-ஆவது லீக் போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் அகமதாபாத் மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
தோனிக்கு இதுதான் கடைசி போட்டி : முகமது கைப்
ஏற்கனவே இந்த தொடரில் முதலிடம் பிடித்து பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ள குஜராத் அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்க இருக்கிறது. அதேவேளையில் இதுவரை 13 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை அணியானது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
ஆனாலும் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் வெளியேறும் முனைப்புடன் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி தான் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி போட்டி என்றும் அதன் காரணமாக தோனியை சிறப்பிக்கும் வகையில் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு வேண்டுகோள் ஒன்றினை இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் முன்வைத்துள்ளார்.
அந்த வகையில் முகமது கைப் கூறியதாவது : தோனிக்கு இதுதான் கடைசி போட்டி என்று நினைக்கிறேன். எனவே அவர் மைதானத்திற்கு வரும்போது அவருக்காக ரசிகர்கள் அனைவரும் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்து அவருக்கு அன்பை செலுத்துங்கள். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் தோனி கடைசி முறையாக மைதானத்தில் வர இருக்கிறார் எனவே இந்த போட்டியில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைப்பார்.
இதையும் படிங்க : டெல்லியிடம் தோற்க இதான்.. பிரீமியர் லீக்கை விட மிகப்பெரிய ஐபிஎல்’லில் கம்பேக் கொடுப்போம்.. ஸ்ரேயாஸ் பேட்டி
அவருக்கு உண்டான மரியாதை கொடுத்து சரியான முறையில் வழியனுப்ப வாருங்கள் என முகமது கைஃப் வேண்டுகோள் வைத்துள்ளார். தற்போது 43 வயதாகும் மகேந்திர சிங் தோனி இதுவரை தனது ஐ.பி.எல் ஓய்வு முடிவினை அறிவிக்காத வேளையில் இன்றைய போட்டியின் முடிவில் அவரது முடிவு என்ன? என்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.



