நாங்க விளையாடுன காலத்துல யோ-யோ டெஸ்ட் இருந்திருந்தா நாங்க 3 பேர் மட்டும் தான் பாஸ் ஆகியிருப்போம் – கைப் வெளிப்படை

Kaif

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணியில் தற்போது ஃபிட்னஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் வீரர்கள் அதிக பிட்னஸ் உடன் யோ-யோ தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அணியில் இடம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய அணி சற்று கூடுதலாக ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

Kaif

அது மட்டுமின்றி உலகளவில் சிறந்த பீல்டிங் அணியாகவும் திகழ்ந்து வருகிறது. ஆனால் முன்னர் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோரைப் போன்றோர் விளையாடிய காலத்தில் யோ யோ டெஸ்ட் குறித்த விதிமுறையெல்லாம் கிடையாது. ஆனாலும் வீரர்கள் பிட்னஸ் உடன் தான் இருந்தார்கள். இருப்பினும் தற்போது உள்ள இந்திய அணி இருக்கும் அளவிற்கு அவர்கள் தகுதியுடன் இல்லை.

அதனால்தான் தற்போதைய இந்திய அணி மற்ற அணிகளுக்கு முன்னோடியாக பீல்டிங்கில் சிறப்பாக திகழ்ந்து வருகிறது. தற்போது இந்திய அணியில் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாகவும், பவுலராக இருந்தாலும் சரி அவர்கள் உடற்தகுதி முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. மேலும் வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட்டிற்கு பிறகே அணியில் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்நிலையில் தற்போது 2000 ஆண்டுகளில் யோ யோ டெஸ்ட் இல்லாதபோது விளையாடிய வீரர்களில் யார் யார் தற்போதைய யோ-யோ தேர்வில் தேர்வாகி இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைசிறந்த பீல்டருமான முகமது கைப் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது :

- Advertisement -

வீரர்களுக்கு ஃபிட்னஸ் என்பது மிகவும் முக்கியம். எங்களது காலத்தில் இதே போன்று யோ யோ டெஸ்ட் எல்லாம் இருந்திருந்தால் நான், லட்சுமிபதி பாலாஜி மட்டுமே அனைத்து அளவுகோளிலும் தேர்வாகி இருப்போம். எங்கள் இருவரைத் தவிர யுவராஜ் சிங்கும் இதில் தேர்ச்சி அடைந்திருப்பார் ஆனால் மற்ற யாருமே இதில் தேர்ச்சி அடைந்திருக்க என்று வெளிப்படையாக கைப் தனது பதிலை அளித்தார்.

kaif

அவர் இந்திய அணிக்காக விளையாடிய காலத்தில் சச்சின், டிராவிட், கங்குலி, இலட்சுமணன் போன்றோரும் ஆடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் மூன்று பேரை தவிர வேறு யாரும் தேர்வாக இருக்க மாட்டார்கள் என்ற அவரின் வெளிப்படையான கருத்து தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.