2 பேருக்கு மட்டும் 48 கோடி கொடுத்தா எப்படி ஜெய்க்க முடியும்.. லக்னோ தவறை விளாசிய ஃகைப், டாம் மூடி

Tom Moody
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணி சுற்றுடன் வெளியேறியுள்ளது. மே 19ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான போட்டிகள் ஹைதராபாத்திடம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதையும் சேர்த்து 12 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்த லக்னோ முதல் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. அந்தப் போட்டியின் முடிவில் ஏலத்திற்கு முன் வாங்கிய மயங் யாதவ் (11 கோடி), மோசின் கான் (4 கோடி) போன்ற பவுலர்கள் காயத்தால் முழுமையாக விளையாடாததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்தார்.

உண்மையில் 27 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு வழங்கப்பட்ட அவர் இத்தொடர் முழுவதும் மோசமாக பேட்டிங் செய்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் இந்த வருடம் லக்னோ அணி ரிஷப் பண்ட் 27, நிக்கோலஸ் பூரான் 21 என 2 வீரர்களை வாங்குவதற்காக மட்டும் 48 கோடிகளை அள்ளிக் கொடுத்தது.

- Advertisement -

லக்னோவின் தவறு:

அப்படி 2 வீரர்களுக்கு பெரும்பாலான தொகையைக் கொடுத்தால் எப்படி தரமான பவுலர்களை வாங்க முடியும்? என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “லக்னோ அணி ரிஷப் பண்ட், பூரான் ஆகிய இருவருக்காக நிறைய செலவு செய்துள்ளார்கள். அதனால் வலுவான பவுலிங் துறையை உருவாக்குவது மிகவும் கடினமாகும்”

“ஏனெனில் அந்த இருவரை பெரியத் தொகைக்கு வாங்கிய உங்களால் ஏலத்தில் போட்டியிட முடியாது. மில்லர், மார்ஷ், பண்ட், பூரான் ஆகிய அதிரடியான பேட்ஸ்மேன்களை நீங்கள் வாங்குவது சிறப்பான விஷயமாகும். அவர்கள் அனைவருமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன்கள். ஆனால் நாளின் இறுதியில் அவர்கள் அடிக்கும் ரன்களை கட்டுப்படுத்த உங்களுக்கு நல்ல பவுலர்கள் தேவை”

- Advertisement -

கைப் விமர்சனம்:

“குறிப்பாக பவர் பிளே ஓவரில் உங்களுடைய பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மிடில் ஓவர்களின் சூழ்நிலைக்கு உங்களை உட்படுத்திக்கொண்டு கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து போட்டியை முடிக்க வேண்டும். அது போன்ற பவுலர்களை லக்னோ வாங்கியதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்காக 12 ஆம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிவது ஏன்? – பிரேவிஸ் நெகிழ்ச்சியான பதில்

“நான் தொடர் முழுவதும் முழுமையாக விளையாடக்கூடிய பவுலருக்கு பணத்தை கொடுப்பேன். லக்னோ அணியின் மொத்த பவுலிங் துறையும் காயத்தால் பாதிக்கப்பட்டது. காயங்கள் நிகழாது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அதிகமாக காயத்துக்கு சந்திக்கக்கூடிய வீரர்களை ஏலத்துக்கு முன் தக்க வைக்காதீர்கள். மாறாக அவர்களை ஏலத்தில் வாங்குங்கள்” என்று கூறினார்.

Advertisement