சி.எஸ்.கே அணிக்காக 12 ஆம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிவது ஏன்? – பிரேவிஸ் நெகிழ்ச்சியான பதில்

Brevis
- Advertisement -

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இன்று மே 20-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது சிஎஸ்கே அணியின் வீரர்கள் டெல்லி மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.எஸ்.கே அணிக்காக 12-ஆம் நம்பர் ஜெர்சியை அணிவது ஏன்? : பிரேவிஸ்

ஏற்கனவே இந்த தொடரில் 12 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது 3 வெற்றிகள் மற்றும் 9 தோல்விகள் என வெறும் 6 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதோடு ஏற்கனவே பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பையும் இழந்துவிட்டது. இதன் காரணமாக இன்று நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆறுதல் வெற்றிபெற வேண்டி சென்னை அணி களமிறங்க இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் சென்னை அணி பெற்ற பெரிய சரிவுக்கு சென்னை அணியின் நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்ட திறமையற்ற வீரர்களே காரணம் என்று பார்க்கப்படுகிறது. அதேவேளையில் காயம் காரணமாக வெளியேறிய வீரர்களுக்கு பதிலாக அணிக்குள் வந்துள்ள ஒரு சில இளம் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காயம் காரணமாக குர்ஜப்னீத் சிங் வெளியேறியதற்கு பிறகு அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் டேவால்டு பிரேவிஸ் மாற்றுவீரராக அணிக்குள் வந்தார். அப்படி வந்ததிலிருந்து சிஎஸ்கே அணிக்காக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் சென்னை அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காகவும் சரி, இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் சரி 17-ஆம் நம்பர் ஜெர்சி அணிந்து விளையாடி வந்தார். ஆனால் இந்த 2025 ஐ.பி.எல் தொடரில் 12-ஆம் நம்பர் ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார். இப்படி 17-ஆம் நம்பர் ஜெர்சிக்கு பதிலாக 12-வது நம்பர் கொண்ட ஜெர்சியை பயன்படுத்துவது ஏன்? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க : லசித் மலிங்காவின் வரலாற்று சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல் – இந்திய பிளேயராக மாஸ் சாதனை

அதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஏப்ரல் 12-ஆம் தேதி தான் என்னை சி.எஸ்.கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ள விரும்புவதாக அறிவித்தது. அதனால் அந்த அழைப்பு வந்த 12-ஆம் தேதியையே எனது ஜெர்சி நம்பராக வைத்துள்ளேன் என பிரேவிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement