- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து – விலகிய நட்சத்திரம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது வரும் நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்யு முடியும் என்கிற முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருவதால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடாத தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான காகிஸோ ரபாடா தற்போது இரண்டாவது போட்டியிலிருந்தும் வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் வெளியான தகவலில் : காகிஸோ ரபாடா தற்போது இந்தியாவில் தென்னாப்பிரிக்க அணி வீரர்களுடன் இணைந்து இருந்தாலும் அவரது உடற்பகுதி காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் காயம் காரணமாக முதல் போட்டியையும் தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் அப்படி அவர் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலிருந்து விலகிய பட்சத்தில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ரஞ்சிக் கோப்பை: வெறும் 1 விக்கெட்டில் தவறிய லீட்.. ரிங்கு சிங்கின் அபாரத்தில் கோட்டை விட்ட தமிழ்நாடு

கடைசியாக லுங்கி இங்கிடி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜூன் மாதம் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாகவும் திகழ்ந்தார். இவ்வேளையில் அவர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளது அந்த அணிக்கு பலத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -