டெத் ஓவர்ல என்னா சூப்பரா பவுலிங் போடுறாரு அவரு. செம பவுலர்ங்க அவரு – இந்திய வீரரை பாராட்டிய ரபாடா

Rabada
Advertisement

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டி நேற்று பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் தாங்கள் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி பஞ்சாப் அணியின் அசத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ள கஷ்டப்பட்டு 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65 ரன்களையும், விரிதிமான் சாஹா 21 ரன்களையும் குவித்தனர். அவர்கள் இருவரைத் தவிர மற்ற எந்த வீரரும் பெரிய அளவில் ரன் குவிக்க வில்லை.

rabada 1

குறிப்பாக பஞ்சாப் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ரபாடா ஓவரில் அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ரபாடா 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது இந்த சிறப்பான பவுலிங் காரணமாக குஜராத் அணியால் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் போனது. பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக தவான் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடாவிற்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் இந்த வெற்றி குறித்து பேசிய அவர் கூறுகையில் : இறுதியாக நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. இந்த ஒரு வெற்றிக்காக தான் நாங்கள் காத்திருந்தோம். இனிவரும் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்றால் எங்களது நம்பிக்கை மிகவும் அதிகமாகும்.

arshdeep 2

நாங்கள் சிறப்பாக பந்துவீசி குஜராத் அணியை கட்டுப்படுத்தியதாக நினைக்கிறோம். மேலும் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடித் தந்து விட்டனர். இந்த மைதானத்தில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை சரியாக முயற்சி செய்து குஜராத் அணியை வீழ்த்தியுள்ளோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்திய அணியின் இளம் வீரரான அர்ஷ்தீப் சிங்கை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

டெத் ஓவர்களில் பந்து வீசுவது என்பது சாதாரணம் கிடையாது. அது போன்ற முக்கியமான பரபரப்பான நேரத்திலும் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி வருகிறார். குறிப்பாக போட்டி செல்ல செல்ல இறுதி கட்ட ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகக் கணித்து அவர் அருமையாக பந்து வீசுகிறார். அவரிடம் உள்ள திறனானது போட்டியின் இறுதி கட்டத்தில் சிறப்பாக அவரை பந்துவீச வைக்கிறது.

இதையும் படிங்க : இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த போது கொடுத்த ஆஃபரை நான் தான் மறுத்து விட்டேன் – நெஹ்ரா வருத்தம்

நான் அவரைப் பற்றி அதிகம் புகழ்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நிச்சயம் அர்ஷ்தீப் சிங் போன்ற ஒரு பவுலர் போட்டியின் எந்த கட்டத்தில் அவரது கையில் பந்தை கொடுத்தாலும் சிறப்பாக பந்து வீசி அணிக்கு பலனை தருவார் என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று இளம் வீரரான அர்ஷ்தீப் சிங்கை ரபாடா பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement