2021, 2023 இந்தியா மாதிரி இல்ல.. ஆஸியை ஃபைனலில் எப்படி சாய்க்கனும்னு தெரியும்.. ரபாடா, கோச் பேட்டி

Kagiso Rabada
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கும் ஆஸ்திரேலியா தகுதி பெற்றது. இதை அடுத்து வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோத உள்ளன.

மறுபுறம் இந்தியா வெளியேறியதும் நன்மைக்கே என்று இந்திய ரசிகர்களே ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் இதே இங்கிலாந்தில் நடைபெற்ற 2021, 2023 ஃபைனல்களில் இந்தியா போராடாமலேயே தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை பைனலில் தோற்கடித்து எப்படி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தங்களுக்கு தெரியும் என தென்னாப்பிரிக்க வீரர் ககிஸோ ரபடா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆஸியை வீழ்த்துவோம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டிக்கு இன்னும் தொலைவு இருக்கிறது. ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போன்ற பெரிய போட்டி உங்களை இப்போதே எழுப்பும். தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா மிகவும் ஆர்வமான போட்டியை கொண்டிருக்கும். ஏனெனில் நாங்கள் ஒரே மாதிரியான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். நாங்கள் கடினமாக விளையாடுகிறோம். ஆஸ்திரேலியாவும் எங்களை வீழ்த்த கடினமாக வருவார்கள் என்பது தெரியும்”

“ஆனால் அவர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். டெஸ்ட் போட்டிகள் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. எங்களுடைய தென்னாப்பிரிக்க ஜாம்பவான்களை பார்த்தால் அவர்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்தவர்களாகவே இருப்பார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

முக்கிய பிளான்:

2021, 2023 ஃபைனலுக்கு முன்பாக இந்திய அணியினர் ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாடினர். அதனால் இங்கிலாந்துக்கு முன்னதாகவே பயணித்து அங்குள்ள சூழ்நிலைகளுக்கு இந்திய அணி உட்படுத்திக் கொள்ள தவறியது. அதுவே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா இழக்க முக்கிய காரணமானது.

ஆனால் அந்தத் தவறை தாங்கள் செய்யப் போவதில்லை என்று தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கோன்ரட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை வீழ்த்த இப்போதே போட்டு வரும் திட்டம் பற்றி அவர் பகிர்ந்தது பின்வருமாறு. “ஃபைனலுக்கு முன்பாக நாங்கள் இங்கிலாந்தில் அயர்லாந்து அல்லது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட முயற்சிக்கவுள்ளோம்”

இதையும் படிங்க: நாட்டுக்காக கபில் தேவ் மாதிரி பும்ரா இதை கூட செய்ய முடியாதா? 1981 காய சரித்திரத்தை பகிர்ந்த சந்து

“அந்த முயற்சி கைகொடுக்கவில்லையெனில் முன்னதாகவே இங்கிலாந்துக்கு சென்று கேன்டர்பரி நகரில் முகாமிட்டு பெரிய பயிற்சிகளை எடுப்போம்” என்று கூறினார். அதாவது ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு முன்னதாகவே பயணித்து அங்குள்ள சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார். அதை வைத்து ஃபைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement