வாங்க முடியாத திறமையான மயங் யாதவ்.. இந்தியாவுக்காக அந்த சீரிஸ்ல விளையாட வாய்ப்பிருக்கு.. ரபாடா கணிப்பு

Kagiso Rabada
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான இளம் வீரர் மயங் யாதவ் ஆரம்பத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். வெறும் 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 155.80 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார். அதனால் ஐபிஎல் 2024 தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

அதே போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் 2 போட்டிகளிலும் 2 விருது வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்த அவர் இந்த சீசனில் அதிவேகமான (157.60) பந்தை வீசிய பவுலர் என்ற தன்னுடைய சொந்த சாதனையையும் உடைத்தார்.

- Advertisement -

ரபாடா பாராட்டு:
அதே சமயம் நல்ல லைன், லென்த் ஆகியவற்றையும் பின்பற்றும் அவர் மிகவும் குறைந்த ரன்களை கொடுத்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார். அதனால் இந்தியா தங்களுடைய தரமான வேகப்பந்து வீச்சாளரை கண்டறிந்து விட்டதாக ஜாம்பவான் பிரட் லீ பாராட்டினார். இந்நிலையில் காசு கொடுத்தாலும் வாங்க முடியாத அதிரடியான வேகம் மயங் யாதவிடம் இயற்கையாக இருப்பதாக தென்னாப்பிரிக்க வீரர் ககிஸோ ரபாடா பாராட்டியுள்ளார்.

எனவே தாம் சொல்ல முடியாது என்றாலும் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று ரபாடா தெரிவித்துள்ளார். இது பற்றி பிடிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களிடம் வாங்க முடியாத ஒன்று அவரிடம் இருக்கிறது. அது தான் இயற்கையான வேகம். அதைத்தான் அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார். அவர் அடிக்கும் லென்த்தை வைத்து அவருடைய திட்டம் தெளிவாக இருக்கிறது”

- Advertisement -

“எனவே தற்போது போட்டியில் அவரால் என்ன கொண்டு வர முடியும் என்பதை பற்றி எதிரணி பேட்ஸ்மேன்கள் அறிவார்கள். ஆனால் அவர் அபாரமான வேகத்தை கொண்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. எங்கு பந்து வீச வேண்டும் என்பதை அவரால் கட்டுப்படுத்த முடியும் என்பதும் தெரிகிறது. அப்படி வேகமும் கட்டுப்பாட்டையும் பெற்றால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் புரிந்து கொள்கிறார்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் ஸ்டேட்டஸ் என்னன்னு இப்போ தெரியுதா.. 1999இல் நானும் இதை சந்திச்சுருக்கேன்.. கில்கிறிஸ்ட் பேட்டி

“அந்த தெளிவு பெற்ற பின்பும் இது போன்ற செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்துவதில் ஆச்சரியமில்லை. தற்சமயத்தில் அவர் மிகவும் சூடாகத் தெரிகிறார். எனவே அவரை அணியில் தேர்ந்தெடுக்க ஒரு திறமையான நபராக தேர்வாளர்கள் பார்ப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அதைப் பற்றி பேசுவது என்னுடைய வேலை கிடையாது. இருப்பினும் எனது புரிதலின் படி அவர் நிச்சயமாக ஒரு சாத்தியமான தேர்வாக பார்க்கப்படுவார்” என்று கூறினார்.

Advertisement