ரோஹித் சர்மாவின் ஸ்டேட்டஸ் என்னன்னு இப்போ தெரியுதா.. 1999இல் நானும் இதை சந்திச்சுருக்கேன்.. கில்கிறிஸ்ட் பேட்டி

Adam Gilchrist
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருவதற்கு அந்த அணி ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் சச்சின் தலைமையில் கூட ஒரு கோப்பையை வெல்ல முடியாமல் திணறிய மும்பை ரோகித் சர்மா தலைமையில் குறுகிய காலத்தில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது.

அதே அனுபவத்தால் முன்னேறிய ரோகித் சர்மா இன்று உலக அரங்கில் சிறந்த பேட்ஸ்மேனாகவும் இந்தியாவின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். ஆனால் அப்படிப்பட்ட அனுபவம் மிகுந்த அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை குஜராத்திடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி கேப்டனாக அறிவித்தது. அந்த சூழலில் முதல் போட்டியிலேயே ரோகித்தை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார்.

- Advertisement -

கில்கிறிஸ்ட் கருத்து:
அதன் காரணமாக வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய கேப்டன் என்றும் பாராமல் பாண்டியாவுக்கு எதிராக மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மும்பையின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை யாருமே நினைக்கவில்லை என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொள்ளாமல் ரசிகர்கள் தெரிவிக்கும் இந்த எதிர்ப்பு ரோகித் சர்மாவின் மதிப்பை காட்டுவதாகவும் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

மேலும் 1999இல் இயன் ஹீலிக்கு பின் தாம் விக்கெட் கீப்பராக விளையாட வந்த போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் தமக்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் நினைவு கூர்ந்த அவர் பாண்டியாவின் பரிதாப நிலமை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இது ரோகித் சர்மா நம் விளையாட்டில் எந்த ஸ்டேட்டஸை கொண்டுள்ளார் என்பதை காட்டுகிறது. மிகவும் மர்மமாக குஜராத் அணியிலிருந்து பாண்டிய வெளியே வந்ததும் மும்பை கேப்டன் பதவியை ரோகித் ராஜினாமா செய்ததும் அனைவரையும் வியக்க வைத்தது”

- Advertisement -

“ஆனால் ஐபிஎல் எனும் மிருகத்தின் குணம் இதுவாகும். இங்கே ரசிகர் மன்றங்கள் அதிக வேகத்துடன் இருக்கின்றன. அதை வேறு எங்கும் நகலெடுப்பது கடினம். ஆஸ்திரேலியாவுக்காக சிட்னி மைதானத்தில் முதல் முறையாக விக்கெட் கீப்பராக வந்த போது எனக்கு எதிராகவும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது புதிய ஒருநாள் அணியை போல் இருந்தது. இயன் ஹீலி விக்கெட் கீப்பர் வேலையிலிருந்து அகற்றப்பட்டார்”

இதையும் படிங்க: அதைக் பார்த்தாலே டாப் பிளேயர்ஸ் க்ரீம் சாப்பிடுவாங்க.. ஆர்சிபி எப்போவும் ஜெயிக்கவே முடியாது.. ராயுடு விமர்சனம்

“அப்போது நானும் இதே போல களத்தில் அடிபட்டேன். அதனால் தற்போது ஹர்திக் பாண்டியா எப்படி உணர்கிறார் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார். இந்த நிலையில் பாண்டியா தலைமையில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றுள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. எனவே பிளே ஆஃப் செல்வதற்கு அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு மும்பை தள்ளப்பட்டுள்ளது.

Advertisement