அதைக் பார்த்தாலே டாப் பிளேயர்ஸ் க்ரீம் சாப்பிடுவாங்க.. ஆர்சிபி எப்போவும் ஜெயிக்கவே முடியாது.. ராயுடு விமர்சனம்

Ambati Rayudu
- Advertisement -

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 1 வெற்றி 3 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கிறது. குறிப்பாக இந்த சீசனில் பெரும்பாலான அணிகள் தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகிறது.

ஆனால் எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோவுக்கு எதிராக தோல்வியை பதிவு செய்த பெங்களூரு இந்த வருடம் தங்களுடைய சொந்த மண்ணில் 2 தோல்விகளை பெற்ற முதல் அணி என்ற பரிதாப சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக லக்னோவுக்கு எதிரான போட்டியில் 182 ரன்களை சேசிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி, கேப்டன் டு பிளேஸிஸ், கேமரூன் க்ரீன், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

விளாசிய ராயுடு:
அதனால் கடைசியில் இளம் வீரர் மகிபால் லோமரர் 33 ரன்கள் எடுத்தும் பெங்களூரு அணி பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்தப் போட்டியை போலவே காலம் காலமாக அழுத்தமான சூழ்நிலைகளில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதில்லை என்று அம்பாத்தி ராயுடு கூறியுள்ளார்.

ஆனால் அதே நட்சத்திர வீரர்கள் அழுத்தமற்ற போட்டிகளில் பிஸ்கட்டில் உள்ள கிரீமை எளிதாக சாப்பிடுவது போல டாப் ஆர்டரில் அபாரமாக விளையாடி பெயர் வாங்குவதாகவும் ராயுடு விமர்சித்துள்ளார். எனவே அழுத்தமான சூழ்நிலைகளில் இப்படி நட்சத்திர வீரர்கள் இளம் வீரர்களை விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பதாலேயே ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாமல் திணறுவதாகவும் ராயுடு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் அவர்களுக்கு யார் பேட்டிங் செய்தார் என்பதை பாருங்கள். இளம் இந்திய வீரர்கள் மற்றும் தினேஷ் கார்த்திக். ஆனால் அந்த இடத்தில் உங்களுடைய பெரிய பெயரைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் தான் அழுத்தத்தை ஏற்க வேண்டும். அவர்கள் எங்கே? அவர்கள் உடைமாற்றும் அறையில் உட்கார்ந்திருக்கின்றனர்”

இதையும் படிங்க: அடுத்த 18 மாசத்துல இந்த பையன் இந்தியாவுக்காக விளையாடுவாரு பாருங்க.. ஸ்டுவர்ட் ப்ராட் உறுதியான பாராட்டு

“இது தான் இந்த அணியில் 16 வருடமாக நடந்து வருகிறது. இது அவர்களுடைய கதையாகும். அழுத்தம் நிலவும் போது அங்கே பெரிய பெயரைக் கொண்ட வீரர்களை நம்மால் பார்க்க முடியவில்லை. அனைத்து இளம் வீரர்களும் லோயர் ஆடரில் விளையாடுகின்றனர். பெரிய பெயரைக் கொண்ட வீரர்கள் டாப் ஆடரில் சென்று க்ரீமை சாப்பிடுகின்றனர். இது போன்ற அணி எப்போதும் வெல்லப் போவதில்லை. இந்த காரணத்தாலேயே அவர்கள் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை” என்று கூறினார்.

Advertisement