அடுத்த 18 மாசத்துல இந்த பையன் இந்தியாவுக்காக விளையாடுவாரு பாருங்க.. ஸ்டுவர்ட் ப்ராட் உறுதியான பாராட்டு

Stuart Broad 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளும் கோப்பையை வெல்வதற்காக போட்டியிட்டு வருகின்றன. அதில் வழக்கம் போல இந்த வருடமும் சில இளம் வீரர்கள் அசத்தலாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக இன்னும் 2 இடத்தில் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று இர்பான் பதான் பாராட்டும் ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங்கில் இளம் வீரர் ரியான் பராக் அசத்தி வருகிறார்.

அவரை விட லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான 21 வயதாகும் இளம் வீரர் மயங் யாதவ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அதனால் ஐபிஎல் வரலாற்றிலேயே தனது முதல் 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ள அவர் இந்த சீசனில் அதிவேகமான பந்தை (157.60 கி.மீ) வீசிய பவுலர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -

18 மாதத்தில்:
இந்நிலையில் இந்தியாவுக்காக இன்னும் 18 மாதங்களில் மயங் யாதவ் விளையாடுவார் என்று ஸ்டுவர்ட் ப்ராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் இவரை நீங்கள் எதிர்கொள்வீர்கள் என்று ஸ்டீவ் ஸ்மித்திடம் தெரிவித்ததாகவும் ஸ்டுவர்ட் ப்ராட் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இது ஒரு இளம் பவுலரிடம் நான் பார்த்த அற்புதமான அறிமுகமாகும். அவரது ரன் அப்பில் மிகவும் அமைதியான மென்மையான முன்னேற்றத்தை கொண்டுள்ளார். அவருடைய 156 கிலோ மீட்டர் வேகம் என்னை கவர்ந்தது. அதை விட அவருடைய லைன் நம்ப முடியாததாக இருந்தது. சர்வதேச வீரர்களை திணறடிக்கும் வேகமும் தரமும் அவரிடம் இருக்கிறது. எனவே இளம் வேகப்பந்து வீச்சாளராக தேடும் அனைத்து பண்புகளும் அவரிடம் உள்ளது”

- Advertisement -

“இருப்பினும் ஒரு சில ஐபிஎல் போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்ததற்காக நாம் அவர் மீது இப்போதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதே சாவியாகும். வேகத்துக்கு எதிராக தடுமாறக்கூடிய பேட்டிங் வரிசையை கொண்ட எதிரான போட்டிகளில் அவரை தேர்வு செய்யலாம். ஒரு போட்டியில் அவர் சோர்வடையலாம். ஆனால் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அசத்துவதற்கான திறமை அவரிடம் இருப்பதாக தெரிகிறது”

இதையும் படிங்க: 3 பேரை கோமாளியாக்கிய மும்பை நிர்வாகம்.. இஷான் கிசான் சூப்பர்மேன் ட்ரெஸ் போட்டதன் காரணம் இதோ

“ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான திறமை அவரிடம் இருக்கிறதா? என்று கேட்டால் ஆம் உள்ளது. ஸ்டீவ் ஸ்மித்தை பார்க்கும் போதெல்லாம் “நீங்கள் இந்தப் பையனை எதிர்கொள்வீர்கள்” என்று தெரிவித்து வருகிறேன். இருப்பினும் நம்முடைய எதிர்பார்ப்பை அதிகமாக வைக்க கூடாது. ஆனால் 18 மாதங்களில் அவர் இந்தியாவுக்காக அறிமுகமாவதை நாம் பார்ப்போம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement