- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுக்கு மேல ருதுராஜ் என்ன பண்ணனும்? ஏன் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்கல.. பிசிசிஐயை விளாசிய ஸ்ரீகாந்த்

இந்தியா கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதை முடித்துக்கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அந்த அணிகளில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு கிடைக்காதது சில இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் சமீப காலங்களில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் இந்தியாவுக்காகவும் டி20 கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியுள்ளார். ஆனாலும் அவரைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தேர்வுக்குழுவும் பிசிசிஐயும் சுமாராக விளையாடும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பளித்து வருகிறது.

- Advertisement -

இன்னும் என்ன செய்யணும்:

அதே சமயம் விமர்சனங்களை தவிர்ப்பதற்காக அடுத்ததாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் விளையாடும் இந்தியா ஏ அணிக்கு பிசிசிஐ ருதுராஜை கேப்டனாக தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னாள் இந்திய வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

“இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மயங் யாதவ் சில ஓவர்கள் வீசியதும் காயமடைந்து விட்டதாக சொல்கிறீர்கள். ரியான் பராக், சிவம் துபே ஆகியோரும் காயமடைந்ததாக சொல்கிறீர்கள். ஆனால் ருதுராஜ் விஷயத்தில் என்னால் எதையும் புரிந்து கொள்ள. ஏமாற்றமடைந்துள்ள அந்தப் பையன் இன்னும் என்ன செய்ய வேண்டும்? ஒரு சதம் அடித்தால் மீண்டும் அவரை டி20 அணியில் தேர்ந்தெடுப்பார்கள் அல்லவா?”

- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு:

“ஆனால் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2 சதங்கள் அடித்துள்ளார். அப்படியிருந்தும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடியதால் வாய்ப்பு பெற்றுள்ளதை நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் ருதுராஜ் தேர்வில் என்ன செய்கிறீர்கள். அவரது விஷயத்தில் ஏன் சுற்றி வளைக்கிறீர்கள்? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

இதையும் படிங்க: விராட் கோலியின் தப்பை மூடி மறைக்க விரும்பல.. ஃபார்முக்கு திரும்ப இதான் ஒரே வழி.. டிகே விமர்சனம்

“அவர்கள் என்ன செய்கிறார்களோ செய்யட்டும். இந்தப் பையன் உள்ளூரில் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவரை நீங்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறீர்கள். இல்லையேல் இந்தியா ஏ அணி அல்லது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி போன்றவற்றில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கிறீர்கள்” என்று தேர்வுக் குழுவினர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி விமர்சித்தார்.

- Advertisement -