விராட் கோலியின் தப்பை மூடி மறைக்க விரும்பல.. ஃபார்முக்கு திரும்ப இதான் ஒரே வழி.. டிகே விமர்சனம்

dinesh karthik
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக விராட் கோலி கருதப்படுகிறார். இருப்பினும் சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெரிய ரன்களை குவிக்கவில்லை. குறிப்பாக 2021 ஜனவரி மாதம் ஸ்மித், ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோரை விட விராட் கோலி அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்து முன்னிலையில் இருந்தார். ஆனால் தற்போது அந்த மூவரைக் காட்டிலும் விராட் கோலி தான் 4வது இடத்தில் பின்தங்கியுள்ளார்.

அவருடைய சுமாரான செயல்பாடுகள் இந்தியாவின் தோல்விகளிலும் அவ்வப்போது எதிரொலிக்கிறது. குறிப்பாக நடைபெற்று வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் அவர் 20 ரன்கள் கூட எடுக்கவில்லை. அதிலும் புனேவில் தரமான சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் விராட் கோலி அவுட்டானது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

- Advertisement -

விராட் கோலியின் தவறு:

அவருடைய சுமாரான ஆட்டம் சொந்த மண்ணில் இந்தியா 12 வருடங்கள் கழித்தும் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததே விராட் கோலியின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் தவறை மூடி மறைக்காத அவர் ஃபார்முக்கு திரும்புவதற்கு தெரிவித்த ஆலோசனை பின்வருமாறு.

“விராட் கோலிக்கு இந்த தொடர் எளிதாக இல்லை. ஸ்பின்னர்கள் அவரைத் தடுமாற வைக்கிறார்கள். எனவே அதற்கான காரணத்தை விராட் கோலி கண்டறிந்து மீண்டும் வலுவாக திரும்ப என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டுமென நினைக்கிறேன். தற்போது அவர் விடைகளை தேடும் மனிதராக இருக்கிறார்”

- Advertisement -

உள்ளூரில் விளையாடுங்க:

“நீங்கள் ஜீனியஸ் போன்ற உச்சத்தை தொட்டு நட்சத்திர அந்தஸ்தை பெறும் போது உங்கள் மீது சவால் மேல் சவால்கள் வீசப்படும். சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் இந்தியா சுழலை நன்றாக எதிர்கொள்ள விரும்புவார்கள். அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்பதே கேள்வி. விராட் கோலி எந்தளவுக்கு திறன் மிக்கவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ரசிகர்கள் சொல்வது போல அவர் நீண்ட காலமாக அசத்தவில்லை என்று சொல்வதிலிருந்து நாம் ஓட முடியாது”

இதையும் படிங்க: அஸ்வினை கழற்றி விடும் நேரம் வந்தாச்சு.. 3வது டெஸ்டில் அவருக்கு சான்ஸ் கொடுங்க.. ஆகாஷ் சோப்ரா

“அதை மூடி மறைக்கவில்லை. கடந்த 2 – 3 வருடங்களாக சுழலுக்கு எதிராக விராட் கோலியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. அதற்கு நாம் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு மீண்டும் விளையாடச் சென்று தற்போதைய டிஆர்எஸ் விதிமுறைகளை தாண்டி எப்படி அசத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக விராட் கோலிக்கு இடது கை ஸ்பின்னர்கள் பெரிய அச்சுறுத்தலை கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை” என்று கூறினார்.

Advertisement