கிங் கோலி எதுக்கு ரிட்டையராகனும்? அவர் இன்னும் 3 வருஷம் விளையாடுவாரு.. ஸ்ரீகாந்த் பேட்டி

K Srikkanth
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகும் அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். அதற்கு முன் அவரையும் ரோஹித் சர்மாவையும் கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது.

இதற்கிடையே விராட் கோலி 2008 முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். அந்த அணியில் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் வெற்றிக்கு போராடிய அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதனால் பெங்களூரு அணியில் இருக்கும் வரை அவரால் கோப்பையை வெல்ல முடியாது என்று நிறைய கருத்துக்கள் காணப்பட்டது.

- Advertisement -

எதுக்கு ஓய்வு பெறனும்:

இருப்பினும் அவற்றை காதில் வாங்காத விராட் கோலி கடந்த சீசனில் 17 வருடம் காத்திருந்து முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்த வருடத்துடன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இல்லையென்றாலும் பெங்களூரு அணியிலிருந்து விலகி வேறு ஐபிஎல் அணிக்காக விளையாட அவர் முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.

அதனாலேயே ஆர்சிபி அணியுடன் விராட் கோலி மேற்கொண்டு எந்த புதிய விளம்பர ஒப்பந்தத்தையும் செய்யவில்லை என்று செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

3 வருடம் விளையாடுவாரு:

“இவையெல்லாம் ஊகங்கள் மட்டுமே. ஏனெனில் இப்போது தான் விராட் கோலி ஆர்சிபி அணியுடன் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். எனவே அவர் ஓய்வு பெறுவார் என்று நான் கருதவில்லை. இவை அனைத்தும் வதந்திகளாக இருக்கலாம். அல்லது வணிக ரீதியான முடிவுகளாக இருக்கலாம். விராட் கோலியை பொறுத்த வரை அவர் ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து விளையாடுவார்”

இதையும் படிங்க: இந்த தொடரை தவறவிடுவது உண்மையிலேயே ஏமாற்றமா தான் இருக்கு – பேட் கம்மின்ஸ் வெளிப்படை

“ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்? தனிப்பட்ட முறையில் முடிவெடுக்காத வரை அவர் ஓய்வு பெற வாய்ப்பில்லை. விராட் கோலி அடுத்த 3 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு போதுமானவர். அரசர்களின் அரசராக இருக்கும் அவர் எப்போதுமே ரன்கள் அடிப்பார்” என்று கூறினார். இதுவரை விராட் கோலி 17 வருடங்களில் 8661 ரன்கள் குவித்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement