இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அவர் ஓய்வுக்குப் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்தார். தற்போது ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
2010, 2011 ஆகிய அடுத்தடுத்த ஐபிஎல் கோப்பைகளை சிஎஸ்கே வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2015க்குப்பின் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்கு விளையாடினார். கடந்த வருடம் 9.75 கோடிக்கு சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்ட அஸ்வின் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறி அவர் வேறு அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திடீரென அஸ்வின் ஓய்வு:
ஏனெனில் இப்போதும் அவரை 2 முதல் 3 கோடி கொடுத்து வாங்குவதற்கு நிறைய அணிகள் தயாராக உள்ளன. அப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஸ்வின் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இன்னும் 2 வருடங்கள் விளையாடும் தகுதியும் திறமையும் அஸ்வினிடம் இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அப்படியிருந்தும் திடீரென அஸ்வின் ஓய்வு பெற்றது ஆச்சரியமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதே சமயம் இந்த முடிவால் தங்களுடைய கேரியரின் கடைசி காலங்களில் இருக்கும் நிறைய இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கான நல்ல பாதையை அஸ்வின் உருவாக்கியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு.
ஸ்ரீகாந்த் வியப்பு:
“அஸ்வின் ஏன் ஓய்வு பெற்றார் என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. அவருடைய இடத்தில் நான் இருந்தால் இன்னும் 2 ஐபிஎல் தொடர்களில் விளையாடியிருப்பேன். அஸ்வினைப் பொறுத்த வரை பணம் புகழ் அல்லது பெயர் பிரச்சனை கிடையாது. ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் இன்னும் 2 வருடங்கள் விளையாடிய பின்னர் வெளிநாடுகளில் விளையாட சென்றிருக்கலாம்”
இதையும் படிங்க: என் கடமையை பற்றி விராட் அப்படி சொன்னது பெரிய பாராட்டு.. அதை சுதர்சன், நாயர் சரியானவங்க.. புஜாரா பேட்டி
“வெளிநாடுகளில் விளையாடுவது நல்லது. ஆனால் அந்தத் தொடர்கள் ஐபிஎல் தொடரை நெருங்க முடியாது. அஸ்வின் என்பவர் ஐபிஎல் வாயிலாக இந்தியா உருவாக்கிய ஒரு சிறந்த வீரர். அவருக்கு ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே அணியில் விளையாடியதாலேயே பெயர் கிடைத்தது. குறிப்பாக கிறிஸ் கெய்ல் விக்கெட்டை அவர் வேடிக்கைக்காக எடுத்தார். அவரால் அட்டாக் மற்றும் எக்னாமிக்கல் பவுலராக செயல்பட முடியும். கடந்த மெகா ஐபிஎல் ஏலத்தின் 3 வருட (2025 – 2027) வட்டத்தின் நடுவே அவர் ஓய்வு பெற்றது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இது இந்தியாவில் ஓய்வு பெறும் வீரர்கள் வெளிநாடுகளில் பயிற்சியாளர் அல்லது விளையாடும் வாய்ப்பு பெறுவதற்கான நல்ல அறிகுறியாகும்” என்று கூறினார்.



