இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் செட்டேஸ்வர் புஜாரா சமீபத்தில் அனைத்து விதமான போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2010 – 2023 வரையிலான காலகட்டங்களில் 103 விளையாடிய அவர் 7195 ரன்களை அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.
அதற்கடுத்த வருடமும் அதிக பந்துகள் எதிர்கொண்ட புஜாரா 2வது ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா தொடரை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதன் பின் தடுமாற்றமாக விளையாடிய அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு 37 வயதில் ஓய்வு பெற்ற அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பாராட்டிய கிங்:
குறிப்பாக 3வது இடத்தில் நங்கூரமாக விளையாடிய புஜாரா 4வது இடத்தில் பேட்டிங் செய்த தம்முடைய வேலையை சுலபமாக்கியதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டினார். அதாவது மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட புஜாரா 3வது இடத்தில் களமிறங்கி அதிக பந்துகளை அதனுடைய பளபளப்பு தன்மையை போக்குவர். அது எதிர்புறம் பேட்டிங் செய்த தமக்கு பயனளித்ததாக விராட் கோலி வெளிப்படையாக பாராட்டினார்.
இந்நிலையில் தம்முடைய கடமையை செய்தது பற்றி விராட் கோலி அவ்வாறு சொன்னது தம்மைப் பொறுத்த வரை பெரிய பாராட்டு என்று புஜாரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். வருங்காலங்களில் தம்முடைய இடத்தில் அந்த வேலையை சாய் சுதர்சன் அல்லது கருண் நாயர் செய்வதற்கு தகுதியானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு.
புஜாரா நெகிழ்ச்சி:
“அது விராட் கோலியிடமிருந்து நல்ல பாராட்டு. அவர் கிரேட் பிளேயர். அவருடைய ஆட்டத்தை நான் எளிதாக மாற்றினேன் என்று விராட் கோலி சொன்னால் அதற்காக மிகவும் பெருமையடைகிறேன். ஏனெனில் நீங்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடும் போது 4, 5, 6 ஆகிய இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்குவது உங்களுடைய வேலை”
இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்போது துபாய் புறப்படுகிறது? – வெளியான புதிய தகவல்
“அந்த வேலையை அடுத்ததாக செய்யப் போகும் வீரர் குறித்து தற்சமயத்தில் சொல்வது கடினம். ஆனால் இந்திய அணியில் நிறைய இளம் மற்றும் திறமையான வீரர்கள் உள்ளார்கள். சாய் சுதர்சன் போன்ற திறமையான வீரர் இப்போது தான் தன்னுடைய பயணத்தை நன்றாக துவங்கியுள்ளார். அவருடைய பேட்டிங்கில் நாம் சில திறமைகளை பார்த்தோம். கருண் நாயரும் 3வது இடத்தில் விளையாடினாலும் அரை சதமடித்தார். எனவே முன்னோக்கிச் செல்வதற்கு சுதர்சன் நாயர் ஆகிய இருவருமே நல்ல திறமையைக் காண்பித்துள்ளனர்” என்று கூறினார்.



