ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்போது துபாய் புறப்படுகிறது? – வெளியான புதிய தகவல்

IND
- Advertisement -

எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு இம்முறை 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகளானது 20 ஓவர் கொண்ட போட்டிகளாக நடைபெறவுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் என எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி இருக்கின்றன. மேலும் இதற்கான அட்டவணையும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டது.

இந்திய அணி எப்போது துபாய் புறப்படும்? :

அந்த வகையில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதலில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று அதன் பின்னர் சூப்பர் போர் சுற்று போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரின் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட முழு பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்போது இந்தியாவிலிருந்து துபாய் புறப்படும்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் செப்டம்பர் நான்காம் தேதி இந்திய அணி இந்தியாவில் இருந்து துபாய் பயணிக்கும் என்றும் வழக்கம் போல அனைத்து வீரர்களும் மும்பை வந்து ஒன்றாக செல்லாமல் இம்முறை இந்த தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் அவர்களது சொந்த மாநிலங்களில் நேரடியாக துபாய் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இதுதான் தோனியின் கடைசி சீசன்.. இதுக்கு மேல் விளையாடமாட்டார் – நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளியான தகவல்

மேலும் செப்டம்பர் நான்காம் தேதி துபாய் சென்றடையும் இந்திய அணியானது அங்கிருக்கும் ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் அடுத்த சில நாட்கள் பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement