சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வினை அறிவித்திருந்தாலும் இன்றளவு வரை ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெறாமல் ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தோனியின் ரிட்டையர்மென்ட் பிளான் :
அந்த வகையில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 278 போட்டிகளில் விளையாடி 24 அரை சதங்களுடன் 5439 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி சிஎஸ்கே அணிக்காக கேப்டனாக ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக பார்க்கப்படும் தோனி தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தை எட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே தோனி விளையாடும் போதெல்லாம் இதுதான் கடைசி சீசன், இதுதான் கடைசி தொடர் என்று பேசப்பட்டு வந்த வேளையில் ஒவ்வொரு ஆண்டும் தான் ரசிகர்களுக்காக விளையாடுவதாக தோனி அறிவித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது 44 வயதை எட்டியுள்ள தோனிக்கு 2026-ஆம் ஆண்டு சீசனே கடைசி சீசனாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் நெருங்கிய வட்டாரத்தின் மூலம் வெளியான ஒரு தகவலின் படி : தோனி இந்த ஆண்டு தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக் கொள்வார் என்றும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் ஓய்வு முடிவை எடுத்து விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அடுத்த சீசனோடு அவர் ஐபிஎல் பிளேயராக கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினாலும் சென்னை அணியின் நிர்வாகத்துடன் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அதனால் ஓய்வுக்கு பிறகு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ அவர் தொடர்ச்சியாக சென்னை அணியுடன் பயணிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இந்த 3 பேர் தான் கேம் சேஞ்சர்கள் – வீரேந்தர் சேவாக் கணிப்பு
ஏற்கனவே தனது எதிர்கால திட்டம் குறித்து பேசியிருந்த தோனி கூறுகையில் : ஐ.பி.எல் ஓய்வுக்கு பிறகு நிச்சயம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை சிஎஸ்கே அணியுடன் இணைந்தே இருப்பேன் என்று தோனி கூறி இருந்தால் நிச்சயம் அடுத்த 2026 ஆண்டுக்கு பிறகு தோனி சி.எஸ்.கே அணியில் ஒரு முக்கிய பொறுப்பினை ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



