அஸ்வின் சுயநலமாகிட்டாரு.. தோனியே மனச விட்டாரு.. அந்த வீரர்களை வாங்குன எப்படி ஜெய்ப்பிங்க.. ஸ்ரீகாந்த்

K Srikkanth
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது இடத்தில் தடுமாறி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வென்ற சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது. அதன் பின் தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிராக வென்ற சென்னை தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மும்பைக்கு எதிரான போட்டியில் மீண்டும் சொதப்பிய சென்னை 9 விக்கெட் வித்தியாசத்தில் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது. அதனால் இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்த 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற அசாத்திய சூழ்நிலைக்குள் சென்னை தள்ளப்பட்டுள்ளது. அந்த 6 வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப் செல்ல முயற்சிப்போம். இல்லையேல் அடுத்த வருடம் கம்பேக் கொடுப்போம் என்று கேப்டன் தோனி தெரிவித்தார்.

- Advertisement -

அஸ்வின் பவுலிங்:

முன்னதாக இந்த வருடம் 9.70 கோடிகள் சம்பளத்திற்கு சென்னை அணிக்காக விளையாட வாங்கப்பட்ட அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் லக்னோ போட்டியில் அவரை கழற்றி விட்ட தோனி மும்பைக்கு எதிராக இம்பேக்ட் வீரராக பயன்படுத்தினார். ஆனால் அந்த வாய்ப்பிலும் அஸ்வின் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி வெற்றியில் பங்காற்றவில்லை.

இந்நிலையில் அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பவுலிங் செய்யவில்லை என்று ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். மாறாக அதிக ரன்கள் வழங்காமல் 4 ஓவர்களை வீசி முடித்தால் போதும் என்ற சுயநல எண்ணத்துடன் அஸ்வின் செயல்படுவதாகவும் அவர் மறைமுகமாக சாடியுள்ளார். மேலும் 2026 பற்றி தோனி இப்போதே சொன்னது குறித்தும் ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் என்ன செய்கிறார்? அவர் தனது பௌலிங்கை தற்காப்பாக மாற்றியுள்ளார்”

- Advertisement -

ஸ்ரீகாந்த் விமர்சனம்:

“அவர் விக்கெட் எடுக்கப் பார்க்கவில்லை. 4 ஓவர்களை எப்படியாவது கடத்தினால் போதும் என்ற வகையில் பவுலிங் செய்யும் அஸ்வின் விக்கெட் எடுப்பதற்கு செல்லாமல் பாதுகாப்பாக செயல்படுகிறார். மும்பைக்கு எதிராக 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெறுவதே அஸ்வினுடைய வேலை. அதை விட்டுவிட்டு பவர் பிளேவில் அவர் பாதுகாப்பாக பவுலிங் செய்தது சிஎஸ்கே அணிக்கு முக்கியமல்ல”

இதையும் படிங்க: 17 வயசு ஆயுஷ் மாத்ரே சி.எஸ்.கே அணியில் இடம்பிடித்தது எப்படி? அவரை தேர்வு செய்ய என்ன காரணம் – ஸ்டீபன் பிளமிங் விளக்கம்

“மும்பையும் அவருக்கு எதிராக சிங்கிள்களை எடுத்து சாதுரியமாக விளையாடியது. நீங்கள் ஐபிஎல் தொடரில் சூழ்நிலையை உணர்ந்து அதற்குத் தகுந்தார் போல் பவுலிங் செய்ய வேண்டும். இதற்கிடையே தோனி அடுத்த வருடத்தை வருடத்தைப் பற்றி பேசத் துவங்கியுள்ளார். அவர் தனது அணியின் செயல்பாடுகளால் விரக்தியடைந்துள்ளார். சென்னை வீரர்கள் ஏதோ ஒரு வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் சரியாகவே சொல்கிறார். உண்மையில் சிஎஸ்கே ஏலத்திலேயே தோற்று விட்டது. சாம் கரன், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி போன்றவர்களை வாங்கினால் எப்படி உங்களால் வெல்ல முடியும்?” என்று கூறினார்.

Advertisement