17 வயசு ஆயுஷ் மாத்ரே சி.எஸ்.கே அணியில் இடம்பிடித்தது எப்படி? அவரை தேர்வு செய்ய என்ன காரணம் – ஸ்டீபன் பிளமிங் விளக்கம்

Fleming
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் விளையாடிய சென்னை அணி சார்பாக 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரில் சிஎஸ்கே அணி சார்பாக எந்தவொரு வீரரும் பெரிய அளவில் யாரும் சோபிக்கவில்லை என்பதற்காக அணியில் மாற்றம் தேவைப்பட்டது. அதையே கிரிக்கெட் விமர்சகர்களும் கூறிவந்தனர்.

ஆயுஷ் மாத்ரேவுக்கு வாய்ப்பு வழங்க இதுவே காரணம் : ஸ்டீபன் பிளமிங்

அந்த வகையில் சென்னை அணியின் மிடில் ஆர்டரில் மிக முக்கிய மாற்றமாக 17 வயதான ஆயுஷ் மாத்ரே கொண்டுவரப்பட்டார். அப்படி தனக்கு கிடைத்த அறிமுக வாய்ப்பிலே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 32 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான ஆட்டம் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள வேளையில் இனிவரும் போட்டிகளிலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 17 வயதான ஆயுஸ் மாத்ரேவை நேரடியாகப் பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவர என்ன காரணம்? என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரானது நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சில வீரர்களை நாங்கள் ட்ரையல்ஸ்க்கு அழைத்து பயிற்சி வழங்கினோம். அப்போது வந்திருந்த வீரர்களில் ஆயுஷ் மாத்ரே சிறப்பாக செயல்பட்டதை நானும் தோனியும் நேரில் பார்த்தோம். அவரிடம் இருக்கும் ஸ்கில்கள் மிக அற்புதமாக இருந்தன.

- Advertisement -

அது நிச்சயம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு இருந்ததாலேயே அவரை அணியில் தேர்வு செய்தோம். அதோடு இளம் வீரரான அவரிடம் நேர்த்தியான பேட்டிங் டெக்னிக் இருப்பதாலே அவர் பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவரப்பட்டார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக இனிமேலும் அதை செய்ய தகுதியானவரான்னு? ரோஹித்தே கண்ணாடியில் பாக்கனும்.. ஸ்டீவ் வாக்

ஏற்கனவே ஆயுஷ் மாத்ரேவை பயிற்சியின் போது சந்தித்த தோனி அவரது பேட்டிங்கை பார்த்து பாராட்டி இருந்தார் நாங்களும் அவரை தொடர்ச்சியாக பயிற்சி அளித்து தற்போது அணியில் இணைத்துள்ளோம் என ஸ்டீபன் பிளமிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement