- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சேவாக்கை பார்த்த மாதிரியே இருந்துச்சி.. காரணத்துடன் சாம் கோன்ஸ்டாஸை பாராட்டிய – ஜஸ்டின் லாங்கர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகித்தனர். அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதியான இன்று துவங்கியது.

சேவாக்கை பாத்த மாதிரியே இருந்தது :

மெல்போர்ன் நகரில் பாக்சிங் டே போட்டியாக துவங்கிய இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வேளையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி 311 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அறிமுகமாகிய சாம் கோன்ஸ்டாஸ் என்கிற 19 வீரர் தனது முதல் இன்னிங்ஸ்லேயே இந்திய அணியை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 65 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர் என 60 ரன்கள் குவித்து அதிரடி காட்டியிருந்தார்.

அவரது இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ள வேளையில் அவரது ஆட்டம் 21 ஆண்டுகளுக்கு முன்னர் விளையாடிய இந்திய வீரர் சேவாக்கை ஞாபகப்படுத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஜஸ்டின் லாங்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சாம் கோன்ஸ்டாஸ் இந்த போட்டிக்கு முன்பு நிறைய விடயங்களை பேசியிருந்தார். தற்போது அதை தனது ஆட்டத்திலும் வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார். அவர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த 2003 ஆம் ஆண்டு சேவாக் எங்களது அணிக்கு எதிராக 233 பந்துகளில் 195 ரன்கள் அடித்து அதிரடி காட்டியிருந்தார்.

இதையும் படிங்க : தடையில் இருந்து தப்பிய விராட் கோலி.. ஐ.சி.சி அவருக்கு வழங்கிய தண்டனை – விவரம் இதோ

அந்த இன்னிங்ஸில் சேவாக் தனி ஆளாக இருந்து எங்களது அணியை சுக்கு நூறாக உடைத்தார். அதேபோன்று தற்போது சாம் கோன்ஸ்டாஸ் ஆட்டத்தை பார்க்கும் போது அவர் தனியாக நின்று இந்திய அணியை இன்று ஆரம்பத்தில் அடித்தது போன்று இருந்தது என ஜஸ்டின் லாங்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -