தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. அப்போபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 284-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பால் ஸ்டெர்லிங் 88, ஹரி டெக்டர் 60 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக லிசாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதைத்தொடர்ந்து 285 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா சுமாராக விளையாடி 46.1 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேசன் ஸ்மித் 91 ரன்கள் எடுத்த நிலையில் அயர்லாந்துக்கு அதிகபட்சமாக கிரைக் எங், கிரகாம் ஹும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு 2வது முறையாக வெற்றியை பெற்று அயர்லாந்து அசத்தியது.
5 வருடங்கள் கழித்து:
இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்றது. முன்னதாக 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் ஜேபி டுமினி தற்போது தென்னாபிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர் இப்போட்டியில் அயர்லாந்து பேட்டிங் செய்த முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ஃபீல்டிங் செய்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
அதற்கான காரணம் என்னவெனில் இப்போட்டி நடைபெற்ற அபுதாபி மைதானத்தில் வழக்கம் போல அதிகப்படியான வெப்பம் நிலவியது. அதை தாங்க முடியாத சில தெனாப்பிரிக்க வீரர்கள் சோர்வடைந்ததால் புத்துணர்ச்சி பெறுவதற்காக மைதானத்திற்கு வெளியே சென்றுள்ளனர். குறிப்பாக ஒரு ஓவர் தானே அதை களத்தில் இருக்கும் வீரர்களே முடித்து விடுவார்கள் என்ற நோக்கத்துடன் சப்ஸ்டிடியூட் தென்னாப்பிரிக்க வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியே சென்றுள்ளனர்.
களத்தில் ஜேபி டுமினி:
அப்போது களத்தில் இருந்த ஒரு வீரர் பெவிலியன் திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். மறுபுறம் சப்ஸ்டிடியூட் வீரர்கள் சோர்வு காரணமாக ஏற்கனவே புத்துணர்ச்சி பெறுவதற்காக வெளியே சென்று விட்டனர். அதனால் வேறு வழியின்றி அந்த ஒரு ஓவர் மட்டும் தம்முடைய நாட்டுக்காக மீண்டும் ஜேபி டுமினி சிரித்த முகத்துடன் ஃபீல்டிங் செய்தார்.
இதையும் படிங்க: நியூஸிலாந்து தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டாட்டா காட்டிய தேர்வுக்குழு.. மும்பை அணியால் சர்பராஸ்க்கு வாய்ப்பு?
அந்த வாய்ப்பில் ஒரு பந்தை சூப்பராக தாவிப்பிடித்த அவர் தம்முடைய அணிக்காக சில ரன்களை சேமித்தார். அந்த வகையில் 5 வருடங்கள் கழித்து ஓய்வு பெற்ற டுமினி மீண்டும் களமிறங்கி ஃபீல்டிங் செய்தது வைரலாகி வருகிறது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் “என்ன தான் சூடு தாங்க முடியவில்லை என்றாலும் அதற்காக பயிற்சியாளரை இப்படி அம்போன்னு விட்டுட்டு போவதா?” என்று தென்னாபிரிக்க வீரர்களை கலாய்கின்றனர்.



