நியூஸிலாந்து தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டாட்டா காட்டிய தேர்வுக்குழு.. மும்பை அணியால் சர்பராஸ்க்கு வாய்ப்பு?

Sarfaraz Khan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பை விரைவில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக மும்பை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சிக்கோப்பை சாம்பியனாக மும்பை சமீபத்தில் 2024 இராணி கோப்பையை ரகானே தலைமையில் வென்றது. எனவே இம்முறை ரஞ்சிக் கோப்பைக்கும் ரகானே கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயருக்கு டாட்டா:

அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மும்பை தங்களுடைய முதல் போட்டியில் அக்டோபர் 11ஆம் தேதி பரோடாவையும் 2வது போட்டியில் அக்டோபர் 18ஆம் தேதி மகாராஷ்டிராவையும் எதிர்கொள்கிறது. மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது.

இதன் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வுக்குழு கழற்றி விட முடிவெடுத்துள்ளது தெளிவாக தெரிய வருகிறது. 2022 நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் சதமடித்து அசத்தினார். ஆனால் அதன் பின் தடுமாறிய அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவுட்டாவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

- Advertisement -

சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு:

இது போக 2024 துலீப், இராணிக் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. மறுபுறம் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து அசத்தினார். அத்துடன் 2024 இராணிக் கோப்பையில் இரட்டை சதமடித்து 222* ரன்கள் குவித்த அவர் மும்பை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதனால் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தற்போது 2024 -25 ரஞ்சிக் கோப்பை தொடருக்கான மும்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: இந்தியா – வங்கதேசம் 2வது டி20 நடைபெறும் டெல்லி மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

குறிப்பாக அடுத்து நடைபெறும் நியூஸிலாந்து தொடரில் இந்தியாவுக்காக விளையாட உள்ளதாலேயே அவரை மும்பை நிர்வாகம் தேர்ந்தெடுக்கவில்லை என்று தெரிய வருகிறது. மொத்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைக்காதது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சர்பராஸ் கான் விளையாடுவதற்கு 90% பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement