ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் சாதனை நிகழ்த்திய ஜோஷ் டங் – விவரம் இதோ

Josh Tongue
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் 3 போட்டியிலும் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியிடம் தொடரை இழந்துவிட்டது.

முதல் இங்கிலாந்து வீரராக ஜோஷ் டங் நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நேற்று டிசம்பர் 25-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. மெல்போர்ன் நகரில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 152 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் டங் 11.2 ஓவர்களில் 45 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த ஐந்து விக்கெட்டுகளின் மூலம் 21 ஆம் நூற்றாண்டில் முதல் இங்கிலாந்து பவுலராக ஒரு முக்கிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் அவர் எடுத்த 5 விக்கெட் மூலம் மெல்போர்ன் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளராக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இதை வெச்சு இந்தியாவுக்காக செலக்ட் பண்ணிடாதீங்க.. சூர்யவன்சி தன்னை அங்கே சோதிக்கனும்.. தேவாங்க் காந்தி

இவருக்கு முன்னதாக 1998 ஆம் ஆண்டு டேரன் காப் மற்றும் டீன் ஹெட்லி ஆகியோர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் 2000-ஆவது ஆண்டுக்கு பிறகு 21-ம் நூற்றாண்டில் இவரே முதல் வீரராக மெல்போர்ன் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement