IND vs AUS : மேலும் ஒரு வீரருக்கு ஏற்பட்ட காயம். முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

Josh-Hazlewood
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இங்கு நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட தயாராகி வருகிறது. அதன்படி எதிர்வரும் 9-ஆம் தேதி நாக்பூரில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது நாக்பூர் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Steve Smith Virat Kohli IND vs AUS

- Advertisement -

இந்த தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டதிலிருந்தே பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி வருவது தொடர் கதையாகி உள்ளது. அந்த வகையில் இந்திய அணியில் ஏற்கனவே பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்பட்ட வேளையில் தற்போது மேலும் ஒரு ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் இந்த முதல் போட்டிக்கான அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த தகவல் தற்போது வெளியாகி பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விலகி உள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Hazlewood

அந்த வகையில் ஏற்கனவே கடந்த மாதம் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய ஹேசல்வுட் இடது காலில் சிறிதளவு வலியை எதிர்கொண்டார். தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்துள்ள அவருக்கு இந்த முதல் போட்டிக்கு முன்பாக இடது காலில் ஏற்பட்டுள்ள காயம் தற்போது தீவிரமடைந்துள்ளதால் அவர் முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இந்த தொடரின் முதல் பாதியில் இடம்பெறாத வேளையில் ஹேசல்வுட்டுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை தந்துள்ளது என்றே கூறலாம். அவரது விலகல் காரணமாக தற்போது ஸ்காட் போலண்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் – ரோஹித் இடையேயான விரிசல் உண்மை தான், 2019இல் அவர் தான் தீர்த்து வெச்சாரு – மற்றுமொரு பின்னனியை பகிர்ந்த ஸ்ரீதர்

இந்நிலையில் தனது காயம் குறித்து பேசியுள்ள ஹேசல்வுட் கூறுகையில் : நிச்சயம் இன்னும் சில நாட்களில் நான் காயத்திலிருந்து மீண்டு விடுவேன் என்று நினைக்கிறேன். நிச்சயம் என்னால் இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement