இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தொடருக்கான பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாட குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இந்த தொடருக்கான பிளே ஆப் சுற்று போட்டிகள் எதிர்வரும் மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
ஆர்.சி.பி அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர் :
தற்போதைய நிலையில் புள்ளி பட்டியலில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளன.
ஆனால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கும் அணிக்கு குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வி அடைந்தாலும் எலுமினேட்டர் போட்டியில் விளையாடும் வாய்ப்பு உள்ளது. எனவே முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கான போட்டி தற்போது மும்பரமாக நிலவி வருகிறது. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது மூன்றாவது இடத்தில் இருந்தாலும் கடைசியாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்கு வர முடியும்.
இதன் காரணமாக அந்த போட்டிக்காக தற்போது ஆர்.சி.பி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் இடையே நாடு திரும்பியிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேஸல்வுட் மீண்டும் அந்த அணிக்கு திரும்ப மாட்டார் என்று கூறப்பட்ட வேளையில் தற்போது இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளார். இந்த ஆண்டு ஆர்.சி.பி அணிக்காக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
அவர் இல்லாமல் ஆர்.சி.பி அணி விளையாடிய கடைசி 2 போட்டிகளில் தோல்வியையே சந்தித்திருந்தது. இந்நிலையில் தற்போது திடீரென ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா வந்துள்ள அவர் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடி விட்டு செல்கிறேன் என்று தனது முடிவை ஆர்.சி.பி அணியில் இணைந்துள்ளார். இப்படி கடைசி லீக் போட்டிக்கு முன்னதாக தனது முடிவை மாற்றியுள்ள ஹேசல்வுட்டின் வருகை அந்த அணிக்கு பலத்தை தந்துள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவின் ஹீரோவாக சான்ஸ்.. காபா ரகானேவிடம் போன் போட்டு இந்த அட்வைஸை கேளுங்க.. ஃகைப் அறிவுரை
இந்த ஆண்டு வழக்கமான கிரிக்கெட்டை விட மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர்கள் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



