இந்தியாவின் ஹீரோவாக சான்ஸ்.. காபா ரகானேவிடம் போன் போட்டு இந்த அட்வைஸை கேளுங்க.. ஃகைப் அறிவுரை

Mohammed Kaif
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. அந்த தோல்விகளால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை. இருப்பினும் வருங்காலத்தில் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவரை தேர்வுக்குழு புதிய கேப்டனாக நியமனம் செய்துள்ளது.

- Advertisement -

ஹீரோவாக சான்ஸ்:

இந்நிலையில் சுப்மன் கில் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இம்முறை இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றி பெறாது என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருப்பதாக முகமது கைப் தெரிவித்துள்ளார். அந்த அழுத்தமற்ற எதிர்பார்ப்பற்ற சூழ்நிலையை பயன்படுத்தி வெற்றியைப் பெற்றுக் கொடுத்து இந்தியாவின் ஹீரோவாகும் வாய்ப்பு சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கு இங்கிலாந்து செல்வதற்கு முன் அஜிங்க்ய ரஹானேவிடம் ஆலோசனைகளைக் கேட்குமாறு அவரை கைப் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி தம்முடைய ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் கைப் பேசியது பின்வருமாறு. “இது கில் ஹீரோவாக வருவதற்கான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். அவருக்கு இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய அணியை தலைமைத் தாங்கும் பொறுப்பு கிடைத்துள்ளது”

- Advertisement -

ரகானேவிடம் பேசுங்க:

“இது போன்ற நேரங்களில் எதிர்பார்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். அதை கில் தம்முடைய சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரகானே ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவை வழி நடத்திய போது காபா டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அனைவரும் இது மிகவும் இளம் அணி என்பதால் வெற்றி பெறாது என்று சொன்னார்கள். அதையும் தாண்டி இந்தியா வெற்றி பெற்றது”

இதையும் படிங்க: டைகர் பட்டோடிக்கு அப்றம்.. இந்த அரிதான வாய்ப்பு கிடைச்சுருக்கு.. போய் கலக்குங்க.. வாழ்த்திய சஞ்சய் பங்கர்

“எனவே கில் தற்போது ரகானேவுக்கு ஃபோன் செய்து பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ரகானே அந்த சுற்றுப்பயணத்தில் மிகவும் இளம் அணியை வைத்து அற்புதமான வேலைகளைச் செய்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். சுப்மன் கில்லும் தற்போது அதே போல செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement