59 ரன்ஸ்.. ஐசிசி ஃபைனலில் ஸ்டார்க் – ஹேசல்வுட் ஜோடி 50 வருட உலக சாதனை.. ஆஸியை காப்பாற்றி அபாரம்

Aus pair
- Advertisement -

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை அற்புதமாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா 138 ரன்களுக்கு சுருட்டி 74 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் பவுமா 36, டேவிட் பேடிங்கம் 45 ரன்களை எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ஸ்டார்க் – ஹேசல்வுட்:

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு லபுஸ்ஷேன் 22, உஸ்மான் கவாஜா 6, கேமரூன் க்ரீன் 0, ஸ்டீவ் ஸ்மித் 13, டிராவிஸ் ஹெட் 9, வெப்ஸ்டர் 9, கேப்டன் கமின்ஸ் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது நிதானமாக விளையாடிய அலெக்ஸ் கேரி 42 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். ஆனால் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய மிட்சேல் ஸ்டார்க் நங்கூரமாக விளையாடி தென்னாப்பிரிக்காவுக்கு சவாலைக் கொடுத்தார்.

அடுத்ததாக வந்த ஜோஸ் ஹேசல்வுட் அவருடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய தொல்லையாக மாறிய அந்த ஜோடி 10வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில் ஹேசல்வுட் 17 ரன்னில் அவுட்டான போதிலும் மறுபுறம் அபாரமாக விளையாடிய ஸ்டார்க் அவுட்டாகாமல் 58* (136) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

உலக சாதனை ஜோடி:

இதன் வாயிலாக ஒரு ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனையை ஸ்டார்க் – ஹேசல்வுட் படைத்துள்ளார்கள். இதற்கு முன் 1975 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இதே லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி ஜெஃப் தாம்சன் ஆகியோர் 10வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: இங்கிலாந்தில் இருந்து அவசர அவசரமாக நாடு திரும்பிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் – என்ன நடந்தது?

அவர்களுடைய உதவியால் 207 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 282 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத்தொடர்ந்து தங்களுடைய முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.

Advertisement