இங்கிலாந்தில் இருந்து அவசர அவசரமாக நாடு திரும்பிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் – என்ன நடந்தது?

Gambhir
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட மிகப் பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இளம் வீரர்களை கொண்ட அணி முதல் முறையாக இந்த தொடரில் பங்கேற்க இருக்கிறது.

அவசர அவசரமாக நாடு திரும்பிய கவுதம் கம்பீர் :

இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியுடன் பயணித்த கௌதம் கம்பீர் வீரர்களுக்கு பயிற்சியினை வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 11-ஆம் தேதி அன்று இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய கௌதம் கம்பீர் அவசர அவசரமாக இந்தியா திரும்பி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வெளியான அறிவிப்பில் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீரின் தாயார் சீமா மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

எனவே குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியுள்ள கௌதம் கம்பீர் இன்னும் சில நாட்கள் இந்தியாவில் இருந்து விட்டு பின்னர் இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ சார்பில் வெளியான தகவலின் படி :

இதையும் படிங்க : 3 ஆம் இடத்தில் யாரை விளையாட வைப்பது? கம்பீர் மற்றும் சுப்மன் கில் இடையே வாக்குவாதம் – என்ன நடந்தது?

கௌதம் கம்பீர் தனது தாயாரின் உடல்நல குறைவு காரணமாகவே இந்தியா வந்துள்ளார் என்றும் அவர்களுக்காக பிசிசிஐ துணை நிற்கும் என்று உறுதி அளித்ததோடு மட்டுமின்றி கம்பீர் மீண்டும் எப்போது இந்திய அணியுடன் இணைவார் என்பதை முறைப்படி அறிவிக்கும் என்றும் கூறியுள்ளது.

Advertisement