IND vs ENG : இது எங்களோட பெஸ்ட் இல்ல. ஆனாலும் – வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டி

Buttler
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் காரணமாக இத்தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்த வேளையில் நேற்றைய போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

INDvsENG

- Advertisement -

ஆனால் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்றைய போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 246 ரன்களை மட்டுமே குவித்தாலும் அடுத்ததாக இந்திய அணியை 38.5 ஓவர்களில் வெறும் 146 ரன்களுக்கு சுருட்டி 100 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது இங்கிலாந்து அணியானது இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது. இதன் காரணமாக அடுத்து வரும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

அதே வேளையில் நேற்றைய போட்டியில் எளிதாக இங்கிலாந்து அணியை சுருட்ட வேண்டிய இந்திய அணி மிடில் ஆர்டரில் ரன்களை சேர்த்து அசத்தியது. குறிப்பாக இங்கிலாந்து அணி 102 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்ததால் 200 ரன்களை கூட எட்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மொயின் அலி மற்றும் டேவிட் வில்லி ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி 246 ரன்களை குவித்தது.

Reece Toply England

அதனை தொடர்ந்து அவர்களது அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லீ 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து அணி பிரமாதமான வெற்றியை ருசித்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த பிரமாதமான வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் எங்களது அணி வீரர்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது. ஆனாலும் பேட்டிங்கில் இது எங்களுடைய பெஸ்ட் ஆட்டம் கிடையாது. இருந்தாலும் ஒரு சவாலான இலக்கை நிர்ணயித்தோம். எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்தது. மேலும் முதலில் பேட்டிங் செய்யும்போது மொயின் அலி மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதையும் படிங்க : IND vs ENG : இலக்கு ஒன்னும் பெருசு இல்ல. ஆனாலும் நாங்க தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் – ரோஹித் வருத்தம்

பந்துவீச்சில் துவக்கத்திலேயே எங்களுக்கு விக்கெட்டுகள் தேவை என்று எதிர்பார்த்த வேளையில் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரீஸ் டாப்லீ எங்கள் அணியின் வெற்றிக்கு உதவினார் என வெற்றி குறித்து ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement