பேட்ஸ்மேன் பவுலரை தடுத்தும் நான் அப்பீல் செய்யாததற்கு காரணம் இதுதான் – ஜாஸ் பட்லர் மட்டமான கருத்து

Jos Buttler Mark wood
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடாந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 208 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 84 ரன்களையும், கேப்டன் ஜாஸ் பட்லர் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Eng

- Advertisement -

அதனை தொடர்ந்து 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 200 ரன்களை மட்டுமே எடுத்ததால் இறுதி நேரத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியானது த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முக்கியமான கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் தான் அடித்த பந்து மேலே எழும்பியதும் பவுலர் அதனை கேட்ச் பிடிக்க ஓடி வந்ததை கவனித்து அவரை கேட்ச் பிடிக்க விடாமல் கையால் தடுத்த விவகாரம் இணையத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பவுலர் ஓடி வருவதை கவனித்த மேத்யூ வேட் அவரை கேட்ச் பிடிக்க விடாமல் தடுத்தது பெரிய குற்றம். ஒருவேளை அதனை இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்திருந்தால் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கிலாந்து வீரர்களும் சரி, கேப்டன் பட்லரும் சரி அம்பயரிடம் இதுகுறித்து எந்த ஒரு முறையீடும் செய்யவில்லை.

Mark Wood Matthew Wade

இதன் காரணமாக மேத்யூ வேட் அந்த விக்கெட்டில் இருந்து தப்பித்தார். ஆனால் நிச்சயம் பேட்ஸ்மேன் செய்த அந்த தவறை சுட்டிக்காட்டி இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்திருக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்தும், ஏன் அப்பீல் செய்யவில்லை என்பது குறித்தும் இங்கிலாந்தின் கேப்டன் ஜாஸ் பட்லர் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய தொடருக்காக வந்துள்ளோம். இங்கு நிறைய நாள் இருக்கவேண்டியுள்ளது. எனவே இந்த தொடரின் ஆரம்பத்திலேயே இப்படி அப்பீல் செய்தால் ஆஸ்திரேலிய ரசிகர்களின் எதிர்ப்பை நாங்கள் பெறுவோம். இப்படி முதல் போட்டியிலேயே நாங்கள் அப்பீல் செய்திருந்தால் மொத்த தொடரும் கஷ்டமாகி இருக்கும். எனவே நாங்கள் அந்த அப்பீலை செய்யவில்லை என்று ஜாஸ் பட்லர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தயாரான முகமது ஷமி. மொத்தம் 3 வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு நாளை பயணம் – வாய்ப்பு யாருக்கு?

அவரின் இந்த கருத்து பயப்படும் விதமாக மிக மட்டமாக உள்ளது என்றும் கிரிக்கெட்டில் இதுபோன்று விடயங்களையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement