தயாரான முகமது ஷமி. மொத்தம் 3 வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு நாளை பயணம் – வாய்ப்பு யாருக்கு?

shami
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை தொடரானது துவங்க உள்ள வேளையில் ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு பயணித்து தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

Bumrah

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு பதிலாக இந்திய அணியில் விளையாடப்போகும் வீரர் யார் என்பது குறித்த கேள்வியே கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் பும்ராவிற்கு பதிலாக தீபக் சாஹர் அல்லது முகம்மது ஷமி ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் தீபக் சாஹ்ரும் தற்போது காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த முகமது ஷமி அந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

Shami-1

இந்நிலையில் முகமது ஷமிக்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கி விளையாடும் அளவிற்கு அவர் உடற்தகுதி பெற்றுள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பாக அறிக்கை வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் டி20 உலக கோப்பை அணியின் ஸ்டான்ட் பை வீரராக நாளை ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளார். அவரோடு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோரும் நாளை ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளனர்.

- Advertisement -

பும்ராவின் மாற்று வீரர் யார்? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் முகமது ஷமி அவரது இடத்திற்கு மாற்றுவீரராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நடுவரை திட்டிய விவகாரம். வெளியான ஸ்டம்ப் மைக் ஆதாரம் – ஐ.சி.சி தண்டனையுடன் கண்டனம்

அதேவேளையில் தற்போது நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்ற முகமது சிராஜ் ஏற்கனவே ஆஸ்திரேலியா மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான அனுபவத்தை பெற்றுள்ளதால் அவரும் இந்திய அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Advertisement