நடுவரை திட்டிய விவகாரம். வெளியான ஸ்டம்ப் மைக் ஆதாரம் – ஐ.சி.சி தண்டனையுடன் கண்டனம்

Finch
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் களத்தில் இருந்த நடுவரை ஆபாசமாக திட்டியதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த விவகாரம் தற்போது இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

- Advertisement -

மேலும் ஆரோன் பின்ச் அம்பையரை திட்டிய விவகாரம் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளதால் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி அந்த போட்டியின் ஒன்பதாவது ஓவரில் பட்லர் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் பந்து பேட்டில் உரசி சென்றது போல இருந்ததால் பவுலர் அவுட் கேட்டார்.

அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் களத்தில் இருந்த நடுவரிடம் அவுட்டர் கேட்டனர். ஆனால் களத்தில் இருந்த நடுவர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. அது தொடர்பாக நடுவரிடம் நாட் அவுட் கொடுத்ததிற்கான விளக்கத்தை ஆரோன் பின்ச் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்தார்.

- Advertisement -

இறுதியில் நடுவரை ஆபாசமாக திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். இது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த ஐசிசி நடத்தை விதி 2.3-யை மீறியதாக கண்டறிந்துள்ளது. இருப்பினும் அவர் அபராதத்திலிருந்து தப்பித்துவிட்டார். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் செய்த முதல் குற்றம் இதுவாகும்.

இதையும் படிங்க : பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திர இந்திய வீரர் – முதல் படத்தின் விவரம் இதோ

எனவே ஐசிசி அவரை மன்னித்து இருந்தாலும் அவர் மீது ஒரு குறைபாடு புள்ளியை சேர்த்து அவருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் களத்தில் இருந்த நடுவர்கள் இருவரும் சேர்ந்து இந்த குற்றச்சாட்டு குறித்த அறிக்கையையும் ஐசிசி-யிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

Advertisement