- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரோட கேட்சை விட்டது தான் தப்பா போச்சு.. தோல்விக்கு பின்னர் மனம் நொந்த ஜாஸ் பட்லர் – பேசியது என்ன?

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது புனே நகரில் நடைபெற்று முடிந்தது.

நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் :

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரினை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட :

- Advertisement -

20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி இந்தியா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு சுருண்டு 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : இந்த போட்டியை நாங்கள் மிகச் சிறப்பாக துவங்கியதாகவே நினைக்கிறேன். போட்டியின் ஆரம்பத்திலேயே மிகச்சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பவர்பிளே வரை எங்களது செயல்பாடு சிறப்பாக இருந்தது.

- Advertisement -

பின்னர் மீண்டும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர். அதேபோன்று பேட்டிங்கில் நாங்களும் மிகச்சிறப்பாக துவங்கி இருந்தாலும் இடையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது சரிவை ஏற்படுத்தும் விதமாக மாறியது. அதோடு துபேவின் கேட்சை முதல் பந்திலேயே நாங்கள் தவற விட்டோம்.

இதையும் படிங்க : இதெல்லாம் டூ மச்.. ஆனாலும் சரிவிலிருந்து மீண்டு நாங்கள் வெற்றிபெற இதுவே காரணம் – சூரியகுமார் மகிழ்ச்சி

அவர் விளையாடிய இன்னிங்ஸ் போட்டியின் நிலைமையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அந்த தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் நாங்கள் பலமாக போட்டிக்கு திரும்புவோம் என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -