கிங் கோலினா சும்மாவா ! ஆல் டைம் ஐபிஎல் சாதனையை நெருங்க முடியாத பட்லர் – முழுவிவரம்

Jos Buttler Vs Virat Kohli IPL
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 15-ஆம் தேதி நடைபெற்ற 63-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் சந்தித்தன. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் லக்னோவை தோற்கடித்த ராஜஸ்தான் 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் தைரியமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் போராடி 178/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 41 (29) கேப்டன் சஞ்சு சாம்சன் 32 (24) தேவ்தூத் படிக்கல் 39 (18) ஆகியோர் தேவையான ரன்களை அதிரடியாக சேர்த்தனர். லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

LSG vs RR

- Advertisement -

அதை தொடர்ந்து 179 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு குயின்டன் டி காக் 7 (8) கேஎல் ராகுல் 10 (17) ஆயுஷ் படோனி 0 (1) ஆகிய 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தானின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். அதனால் நடுவரிசையில் தீபக் ஹூடா 59 (39) ரன்களும் க்ருனால் பாண்டியா 25 (23) ரன்களை எடுத்தாலும் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக 27 (17) ரன்களை எடுத்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுத்த தவறியதால் 20 ஓவர்களில் 154/8 ரன்கள் மட்டுமே எடுத்து லக்னோ பரிதாபமாக தோற்றது.

ராஜஸ்தான் கலக்கல்:
அதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்த லக்னோ 3-வது இடத்திற்கு பின்தங்கினாலும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் உறுதியாக உள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்னா, ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் 8-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி 2-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% உறுதிசெய்துள்ளது. இந்த வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் 17* (9) ரன்கள் எடுத்த டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Jos Buttler Clean Bowled

முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானுக்கு நல்ல பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 2 (6) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் இதர வீரர்கள் தேவையான ரன்கள் எடுத்ததால் தப்பிய அந்த அணி முக்கிய வெற்றியை பதிவு செய்தது. இந்த வருடம் ஆரம்பகட்ட போட்டிகளில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக ரன்களை குவித்து முதல் வாரத்தில் இருந்தே அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார்.

- Advertisement -

தடுமாறும் பட்லர்:
குறிப்பாக கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த போட்டியில் சதமடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அதிலும் முதலில் 7 போட்டிகளிலேயே 3 சதங்களை தெறிக்கவிட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் முதல் பகுதியில் 3 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் படித்தார்.

buttler 1

அப்படி முரட்டுத்தனமான பார்மில் வெறி கொண்ட வேங்கையாக அவர் ரன் மழை பொழிந்ததை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் 2016இல் 973 ரன்களை விளாசி ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனைப் படைத்த விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை முறியடிப்பார் என்று நம்பினார்கள். அதற்கேற்றார் போல் 2016இல் முதல் 7 போட்டிகளில் விராட் கோலி 433 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் பட்லர் அதே முதல் 7 போட்டிகளில் 489 ரன்கள் எடுத்ததால் நிச்சயம் விராட் கோலியின் ஆல் டைம் சாதனை உடையப்போவதாக அனைவரும் நினைத்தனர்.

- Advertisement -

1. ஆனால் அடுத்த 6 போட்டிகளில் தடுமாறிய அவர் கடைசி 4 போட்டிகளில் முறையே 22, 30, 7, 2 என சுமாரான ரன்களை மட்டுமே எடுத்ததால் விராட் கோலியின் ஆல் டைம் சாதனை முறியடிப்பதற்கான வாய்ப்பு 99% கடினமாகியுள்ளது.

2. அதிலும் 2016இல் முதலில் 13 போட்டிகளில் விராட் கோலி 865 ரன்களை 86 என்ற சராசரியில் 156 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 4 சதங்கள் 5 அரை சதங்களுடன் எடுத்தார்.

3. ஆனால் பட்லர் தற்போது 13 போட்டிகளின் முடிவில் வெறும் 627 ரன்களை 52 என்ற சராசரியில் 148 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தலா 3 அரை சதங்கள் 3 சதங்களுடன் மட்டுமே எடுத்துள்ளார். விராட் கோலி 5 ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். பட்லர் 3 ஆட்டநாயகன் விருதை மட்டுமே வென்றுள்ளார்.

3. இதிலிருந்து 2016இல் கிட்டத்தட்ட 1000 ரன்களை குவித்து முதல் கோப்பையை முத்தமிட வேண்டும் என்ற எண்ணத்தில் முழு மூச்சுடன் போராடிய விராட் கோலி அதில் தோல்வி அடைந்தாலும் படைத்த ஆல் டைம் சாதனை உடைவது கடினம் என்ற நிலைமை உருவாகியுள்ளது. மேலும் அந்த அற்புதமான சாதனையை இந்தியர் தொடர்ந்து வைத்திருப்பது இந்திய ரசிகர்களுக்கும் பெருமையான ஒன்றாகும்.

Advertisement