100வது போட்டியில் சதமடிக்க அது தான் ஹெல்ப் பண்ணுச்சு.. ஆர்சிபி’யை தோற்கடித்த பட்லர் பேட்டி

Jos Buttler
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு போராடி 20 ஓவரில் 183/3 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி சதமடித்து 113* (72) கேப்டன் டு பிளேஸிஸ் 44 (33) ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 184 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனாலும் 2வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 69 (42) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

100இல் 100:
அப்போது ரியன் பராக் 4, துருவ் ஜுரேல் 2 ரன்களில் அவுட்டாகி எமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மயர் அதிரடியாக 11* (6) ரன்கள் எடுத்ததால் சதத்தை நெருங்குவாரா என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆனால் 1 ரன் தேவைப்பட்ட போது சிக்ஸர் அடித்த அவர் தன்னுடைய 6வது ஐபிஎல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 100வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் சாதனையும் படைத்த அவர் 19.1 ஓவரில் ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார். அதனால் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் கடைசி பந்தில் சரியாக டைமிங் கொடுக்காத போதிலும் அதிர்ஷ்டத்தின் உதவியால் பந்து பவுண்டரிக்கு சென்று தமக்கு சதத்தை கொடுத்ததாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் பேசியது பின்வருமாறு. “அதை நான் சரியாக டைமிங் செய்யவில்லை. இருப்பினும் பந்து பவுண்டரி எல்லையை தாண்டிச் செல்லும் அளவுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அதனால் கிடைத்த வெற்றியால் மகிழ்ச்சி. நீங்கள் எவ்வளவு காலம் விளையாட்டை விளையாடியிருந்தாலும் உங்களுக்கு அழுத்தங்கள் இருக்கும். அப்போது மனதை சக்தி வாய்ந்ததாக வைத்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஏற்கனவே டெல்லி டீம் இருக்குற நிலைமையில இது வேறயா? அடுத்த போட்டியில் இருந்து – விலகிய நட்சத்திர வீரர்

“உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. ஒரு கட்டத்தில் அது சரியாக விடும். சில சமயங்களில் அது சரியாகி விடும் என்று நீங்களே சொல்ல வேண்டும். சென்ற போட்டியில் வெறும் 13 ரன் மட்டுமே அடித்தாலும் நான் நன்றாக உணர்ந்தேன். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் எனக்கு நல்ல தொடர் அமைந்தது. அதை இங்கே காட்ட ஒரு இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது என்பதை உணர்ந்தேன். இந்த வருடத்தைப் போலவே கடந்த 3 சீசன்களாக நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளோம். ஆனால் அதைத் தொடர கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement