ஐ.பி.எல் நட்பு ஐபிஎல்லுடன் முடிஞ்சி போச்சு..! இவர்கள் வெறும் போட்டியாளர்கள் தான்.! ஜோஸ் பட்லர்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஐபிஎல் போட்டிகளின் போது இந்திய வீரர்களுடன் ஏற்பட்ட நட்பை இந்த தொடரில் நினைவில் வைக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

jos butler

- Advertisement -

ஐபிஎல் தொடர் மூலம் பல்வேறு இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் நட்பு கொண்டு வந்தார் ஜோஸ் பட்லர். ஆனால், இந்தியாவிற்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய வீரர்களை போட்டியாளர்களாக மட்டும் தான் பார்க்கின்றேன் என்று கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள ஜோஸ் பட்லர் ”நட்பு என்பதெல்லாம் இரு நாடுகள் விளையாடும் போட்டிகளில் பார்க்க முடியாது.

ஐபிஎல் போட்டிகளில் அனுபவமிக்க வீரர்களிடம் இருந்து நான் பல விடயங்களை கற்றுக் கொண்டேன். அவர்கள் அனைவரும் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் விளையாடினார்கள். அதிலும் விராட் கோலி மிகவும் திறமையானவர், அவரது பேட்டிங் திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போதும் அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்வார்.” என்று தெரிவித்துள்ளார்.

jos

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஜோஸ் பட்லர் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு மும்பை அணியில் விளையாடி வந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 13 போட்டிகளில் 548 ரன்களை குவித்தார். அதில் 5 அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement