ரவி சாஸ்திரி சொன்னதை அப்படியே செய்து காட்டிய ஜாஸ் பட்லர் – மும்பை அணி செய்த தவறு என்ன?

Buttler-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் இன்று ஒன்பதாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முதல் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்துள்ளது.

MI-vs-RR

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து வந்த படிக்கலும் 7 ரன்களில் ஆட்டம் இழந்ததால் மிடில் ஆர்டரில் ஜாஸ் பட்லர் மற்றும் சாம்சன் ஆகியோர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விரைவாகவே 2 விக்கெட் விழுந்ததால் 3வது விக்கெட்டுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த பட்லர் சஞ்சு சாம்சன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தது.

சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் பின்வரிசையில் ஹெட்மையர் 14 பந்துகளைச் சந்தித்த வேளையில் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 35 ரன்களை அசத்தலாக விலாச பட்லர் ஒருபுறம் தனது சரமாரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 68 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர் என 100 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

buttler 1

இறுதியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 193 ரன்களை குவிக்க தற்போது 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு முன்பாகவே இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மும்பை அணியை எச்சரித்திருந்தார்.

- Advertisement -

அதில் அவர் பவர் பிளே ஓவருக்குள் ஜாஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தி விட வேண்டும் என்றும் அப்படி நிறுத்தவில்லை என்றால் நிச்சயம் மும்பை அணிக்கு அவர் தனது பேட்டிங்கால் சரியான பாடத்தை புகட்டுவார் என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : இப்படி ஒரு சாதனையா! பிறந்த நாளில் சச்சினின் 24 வருட சாதனையை உடைத்த நியூசிலாந்து வீரர் – நடந்தது இதோ

அதன்படி இன்றைய போட்டியில் அவரை தடுக்க முடியாமல் போனதால் சிறப்பாக விளையாடிய பட்லர் 68 பந்துகளில் சதம் அடித்து தனது பலத்தை நிரூபித்துள்ளார். ரவிசாஸ்திரி இன்று காலை சொன்ன விடயம் அப்படியே நடைபெற்று உள்ளதால் அவரின் கணிப்பு முற்றிலும் உண்மையாகியுள்ளது. அதே வேளையில் தற்போது மும்பை அணி தங்களது முதல் வெற்றிக்காகப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement