கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் இளம் வயதில் அறிமுகமான வீரராக வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தார். அதுமட்டும் இன்றி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மாபெரும் சாதனையையும் நிகழ்த்தி இருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய : ஜாஸ் பட்லர்
அதனை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி என்பது 35 பந்துகளின் சதம் அடித்து இளம் வயதில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் சூரியவன்ஷி நிகழ்த்தியிருந்தார். இப்படி ஐபிஎல் போட்டிகளில் அசத்திய அவருக்கு 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.
அந்த வகையில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் விளையாடிய அவர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறவும் மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இப்படி அவரது சிறப்பான ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க விரைவில் அவர் இந்திய அணிக்காக அறிமுகமாக வேண்டும் என்ற பேச்சுக்களும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் குறித்து இங்கிலாந்து அணியன் முன்னாள் கேப்டனான ஜாஸ் பட்லர் சில கருத்துக்களை பாராட்டுகளாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : வைபவ் சூர்யவன்ஷி நான் பார்த்த இளம் வீரர்களிலேயே மிகச்சிறந்த ஒருவர்.
இதையும் படிங்க : ப்ளீஸ் யாரையும் திடாதீங்க.. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த அஷ்வின் – விவரம் இதோ
19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் 80 பந்துகளில் 175 ரன்கள் அடித்த இன்னிங்சை என்னால் மறக்க முடியாது. நிச்சயம் அவர் 21 அல்லது 25 வயதினை எட்டும் போது சர்வதேச கிரிக்கெட்டை ஆட்கொள்ளப்போகிறார் என்றும் அவரை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



