ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் பலமான கம்பேக் கொடுப்பதற்காக தயாராகி வந்த சென்னை அணி முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை அணி பெற்ற இந்த அடுத்தடுத்த தோல்விகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சி.எஸ்.கே ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த : ரவிச்சந்திரன் அஷ்வின்
ஏனெனில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது இந்த ஆண்டு நடைபெற்ற முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் அந்த அணியை விமர்சிக்கவும் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் ரசிகர்களுக்கு மிக முக்கிய வேண்டுகோள் ஒன்றினை இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் முன் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சி.எஸ்.கே ரசிகர்களுக்கு என பணிவான வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து எந்த ஒரு வீரரையும் சமூக வலைத்தளத்தில் விமர்சிக்காதீர்கள் அல்லது திட்டாதீர்கள்.
ஏனெனில் ஒவ்வொரு வீரருக்கும் வெளியில் இருந்து உங்களது ஆதரவை தந்தால் நிச்சயம் அவர்களால் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். வெற்றிபெறும் போது மட்டுமல்லாமல் தோல்வியை சந்திக்கும் போதும் நமது அணியுடன் உறுதுணையாக நிற்க வேண்டும்.
இதையும் படிங்க : டி20 போட்டிகளில் இளம் இந்திய வீரராக ரவி பிஷ்னாய் நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ
இளம் வீரர்களை சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் விளையாட அனுமதிக்க வேண்டும். அவர்கள் தற்போது தான் கற்று வருகிறார்கள். எனவே அடுத்து இரண்டு வருடங்களில் யாராலும் வீழ்த்த முடியாத ஒரு பலமான அணியாக சி.எஸ்.கே மாறும் எனவே தற்போதைக்கு உங்களது ஆதரவை சிஎஸ்கே அணிக்கு தாருங்கள் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



