டி20 உலகக்கோப்பை : தொடர்நாயகன் விருதை அந்த இந்திய வீரருக்கு குடுங்க – ஜாஸ் பட்லர் வெளிப்படை

Jos-Buttler
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இன்று மெல்போர்ன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி டி20 உலக கோப்பை சாம்பியனாக மாறும். அப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவிடம் இருந்து சாம்பியன் பட்டத்தை பறிக்கப் போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

PAK vs ENG Jose Buttler Babar Azam

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தொடர் நாயகனை தேர்வு செய்வதில் புதிய விதிமுறையை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 9 வீரர்களை தேர்வு செய்து பட்டியலிட்ட ஐசிசி ரசிகர்களின் வாக்கெடுப்பின்படியே தொடர் நாயகனை தேர்வு செய்யப்படுவார் என்று அறிவித்தது. அந்த வகையில் மொத்தம் ஒன்பது வீரர்கள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அது தவிர்த்து பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப்கான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். மேலும் இங்கிலாந்து அணி சார்பாக சாம் கரண், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுதவிர்த்து இலங்கை சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஆசரங்கா, ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா என ஒன்பது வீரர்களை ஐசிசி தொடர் நாயகன் விருதுக்காக பரிந்துரை செய்து பட்டியலிட்டுள்ளது. இந்த ஒன்பது வீரர்களில் அதிக வாக்குகளை பெறும் வீரர் தொடர் நாயகன் விருதினை வெல்வார்.

Suryakumar YAdav

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லரிடம் இந்த டி20 உலக கோப்பை தொடர் நாயகனாக யாரை அறிவித்தால் அது சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜாஸ் பட்லர் : இந்திய அணியை சேர்ந்த சூரியகுமார் யாதவுக்கு தான் தொடர் நாயகன் விருது வழங்கப்பட வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் சூரியகுமார் யாதவ் இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது பேட்டிங்கை பார்ப்பதே மிகச்சிறந்த அனுபவம். அந்த வகையில் அற்புதமாக விளையாடிய அவருக்கு இந்த விருதினை வழங்க நான் விருப்பப்படுகிறேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எங்கள் அணியிலும் சாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ் இந்த தொடர் நாயகனுக்கான போட்டியில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : என்னய்யா இதெல்லாம் ஒரு கேள்வியா? கடுப்பாகி முகத்தை திருப்பிய பாபர் அசாம் – நடந்தது என்ன?

அவர்களில் ஒருவர் இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடினால் அவர்களும் இந்த விருதினை பெற வாய்ப்புள்ளது என பட்லர் கூறினார். சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் தனது அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி மொத்தம் 239 ரன்கள் 190 ஸ்ட்ரைக் ரைட்டில் குவித்து இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement