- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் கோப்பையை ஆர்.சி.பி வென்றிருக்கலாம்.. ஆனால் சூர்யவன்ஷி செய்தது வேற – பட்லர் பாராட்டு

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர்கள் 10 வெற்றியுடன் முதலிடத்தை பிடித்த வேலையில் பிளே ஆப் சுற்றிலும் ஆதிக்கம் செலுத்திய அவர்கள் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருந்தனர்.

வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய ஜாஸ் பட்லர் :

இந்த 2026 ஐ.பி.எல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றிருந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி 16 போட்டிகளில் விளையாடி 776 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருந்தார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 5 விருதுகளையும் அவர் வென்றிருந்தார். அதிரடியாக சிக்சர் அடிப்பது மட்டுமின்றி அணிக்கு தேவையான போது பொறுப்பாகவும் விளையாடும் அவரது ஆட்டம் பலரது மட்டும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றிருந்தாலும் இந்த ஆண்டின் சூப்பர் ஸ்டார் வைபவ் சூரியவன்ஷி தான் என இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆர்.சி.பி அணி இந்த ஆண்டு கோப்பையை வென்றிருந்தாலும் ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரையும் வென்ற சூப்பர் ஸ்டார் என்றால் அது வைபவ் சூர்யவன்ஷி தான் என்று பாராட்டினார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களை இப்படி மாற்ற வேண்டும்.. சச்சின் கொடுத்த ஐடியா – விவரம் இதோ

அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமலே ஒரு வீரர் இப்படி சர்வதேச நட்சத்திரமாக உருவடுப்பதை நான் பார்த்ததில்லை. தற்போது இங்கிலாந்தில் கூட சூரியவன்ஷி பற்றி பேசுகிறார்கள் என ஸ்டூவர்ட் பிராடு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -