
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டியில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்பட்டது.
அப்போது இந்தியா உணவு இடைவேளைக்குப்பின் வெற்றி பெறும் என்று வாஷிங்டன் சுந்தர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். மறுபுறம் ஒரு மணி நேரத்திலேயே எஞ்சிய 6 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோத்திக் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் சவாலில் வெற்றி பெற்றதால் வாஷிங்டன் சுந்தரை இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் கலாய்த்துள்ளார்.
சுந்தர் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்காமல், கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று தெனாவட்டாக சொன்னதாக பட்லர் கூறியுள்ளார். அதனாலேயே பேட்டிங் செய்ய வந்த சுந்தரை கட்டம் கட்டி ஸ்லெட்ஜிங் செய்து அவுட்டாக்குமாறு பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் சொன்னதாகவும் பட்லர் கூறியுள்ளார். இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் பட்லர் பேசியது பின்வருமாறு. “அந்தப் பேட்டியில் சுந்தர் என்ன சொன்னார்? நாளை நாங்கள் வெற்றி பெற்று 2 – 1 நம் முன்னிலை பெறுவோம் என்று சொன்னார் அல்லவா?”
“அந்த சூழ்நிலையை சுந்தர் தவறாக புரிந்து கொண்டாரா? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன் என சுந்தர் தெரிவிப்பதே சரியானதாக இருந்திருக்கும். ஆனால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று சொன்னது நம்ப முடியாத நம்பிக்கை. அவர் அப்படி சொன்னது கடைசி நாள் காலையில் இங்கிலாந்து அணியை நெருப்பாக மாற்றக்கூடியதாக அமைந்தது”
“சுந்தர் பேட்டிங் செய்ய வந்த போது பால்கனியில் அமர்ந்து கொண்டு மெக்கல்லம் சொன்னக் காட்சிகள் காண்பிக்கப்பட்டது. அந்தக் காட்சியில் “இந்தப் பையன் தான் அப்படி சொன்னது, இவரை விடாதீர்கள்” என்ற வகையில் இங்கிலாந்து வீரர்களிடம் மெக்கல்லம் சைகை செய்தார். அது போன்ற பயங்கரமான சூழ்நிலையை உங்களுக்கு (சுந்தர்) நீங்களே உருவாக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா?”
இதையும் படிங்க: 2002 உ.கோ ஜெய்ச்சுட்டு கங்குலி சட்டையை சுழற்றினாரா? ஆர்ச்சர் குழப்பதை தீர்த்தது பற்றி ஸ்டோக்ஸ் பேட்டி
“நீங்கள் அப்படி செய்ததால் உங்களைச் சுற்றி அனைத்து இங்கிலாந்து வீரர்களும் வந்தனர். நேற்று ஊடகத்தில் அப்படி சொன்னதாலேயே இங்கிலாந்து வீரர்கள் உங்களை சுற்றி வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே மெக்கல்லமும் முன்னோக்கி வந்து இந்தப் பையனுக்கான எதிர்ப்பை அதிகரிக்கலாம் என்று சொன்னார்” எனக் கூறினார்.